யாழில் இளநீர் வாங்கி பருகிய அப்பாவி அரச ஊழியர் அதிர்ச்சியில்.

யாழ்ப்பாணத்தில் தாகம் காரணமாக இளநீர் வாங்கி பருகிய அப்பாவி அரச ஊழியர் ஒருவர் அதன் பின்னர் தான் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் தனது சக ஊழியர்களுடன் பகிர்ந்துள்ளார்.

ilaneer99

குறித்த ஊழியர் நேற்றைய தினம் மதிய வேளையுடன் அரைநாள் விடுப்பு பெற்று வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் போது துரையப்பா விளையாட்டரங்கு வீதியும், யாழ் பழைய பொலீஸ்நிலைய சுற்றுவட்டத்தில் இருந்து துரையப்பா விளையாட்டரங்கு வீதியில் இணையும் வீதியும் சந்திக்கும் இடத்தில் டாடா பட்டா வாகனத்தில் வைத்து நபர் ஒருவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார்.

வெயிலின் தகிப்பும், தாகமும் அவ் அரச ஊழியரை தூண்டி விட, அவ் இளநீர் விற்கும் இடத்துக்கு சென்றவர் இளநீரை கேட்டுள்ளார். உடனடியாக இளநீர் ஒன்றை தூக்கிய அவ் வியாபாரி இளநீரை வெட்டி பருகக் கொடுத்துள்ளார். முற்றிய நிலையில் இளநீர் பதத்தை அது கடந்திருந்தாலும், தாகம் காரணமாக அவ் இளநீரை பருகியுள்ளார்.

அதன் பின்னர் விலையை கேட்டவருக்கு தூக்கிவாரிப் போட்டுள்ளது. இளநீர் ஒன்றின் விலை 130 ரூபாவாம். அதிர்ந்த அவர், மீண்டும் விலையை கேட்டுள்ளார்…. அதே பதில் தான். இளநீரை குடித்தபின் வேறென்ன செய்ய முடியும்… இளநீர் பருக முன்னர் விலையை கேட்காதது தனது தவறு தான் என்பதை உணர்ந்து காசை கொடுத்துவிட்டு கிளம்பியுள்ளார் சோகத்துடன்.

இலங்கையில் அண்மையில் தேங்காய் விலை உயர்ந்திருந்தது. அனால் அது அரசின் கடும் பிடி காரணமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இப் பகல் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

குடாநாட்டு மக்களே, இவ் விடயம் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கவும்.