தென்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பான சூழல்.

அண்மையில் களுத்துறை, பாத்தகட பிரதேச வான் பரப்பில் விசித்திரமான முறையில் பறந்த ஹெலிகொப்டர் குறித்து பரவலாக செய்திகள் வெளியாகி இருந்தன.

Capture

குறித்த பகுதியில் நிலத்தடி சுரங்கங்கள் இருப்பது கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும், நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த சுரங்கங்களில் புதையல் தேடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கான உண்மையான காரணங்கள் வெளியாகி உள்ளது.

களுத்துறை, பாத்தகட பிரதேசத்தில் உள்ள கிராஃபைட்டை கண்டுபிடிப்பதற்கான தனியார் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆயுவு நடவடிக்கை என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிராஃபைட் – (கிராஃபைட் என்பது தாது பொருள், ஒரு crystalline allotrope கார்பன், ஒரு கனிமப்பொருளாகும்)

உலகிலேயே சிறந்த தரம் வாய்ந்த கிராஃபைட் இலங்கையில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆராய்ச்சிக்காகவே குறித்த ஹெலிகொப்டர் வித்தியாசமான முறையில் பறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி ஆராய்வதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணமே சக்கரம் போன்ற பகுதியாகும்.

இது தொடர்பில், குறித்த தனியார் நிறுவனத்தால் அப்பகுதியிலுள்ள பிரதேசசெயலகங்களுக்கு தகவல் தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முன்னறிவித்தல் இன்றி குறித்த ஹெலிகொப்டர் பறந்து சென்றமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.