திருமண வாழ்க்கைக்கு காதல் என்பது பணத்தை விட மிகவும் அவசியம். ஆனால் அந்த அன்பு நாளாக நாளாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

நான் ஒருவரை காதலிக்கிறேன். ஆனால் எனக்கு விரைவில் திருமணமாக போகின்றது. நான் இருவருடனும் பழகி இருக்கிறேன். நான் இவரை திருமணம் செய்து கொள்ள நினைக்க காரணம், அவர் நல்ல நிலையில் இருக்கிறார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (10)

அவரை திருமணம் செய்து கொண்டால் என் வாழ்க்கை செட்டிலாகி விடும். ஆனால் என் ஆழ்மனதில் எனக்கு இன்னொருவர் மீது தான் காதல் உள்ளது.

நான் மிகவும் குழப்பமாக இருக்கிறேன். எனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. ஆனால் நான் இன்னும் எனது முன்னால் காதலனை தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அவருடம் என்னை விரும்பிக் கொண்டு தான் இருக்கிறார்.

தீர்வு

திருமணத்தை நீங்கள் நீண்ட கால நோக்கத்தில் நீங்கள் பார்க்க வேண்டியது அவசியம். திருமணம் என்பது நீங்கள் மற்றும் உங்களது கணவரை மட்டுமே சார்ந்தது அல்ல. உங்களது முழு குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்தது.

நீங்கள் ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறீர்கள். திருமண வாழ்க்கைக்கு காதல் என்பது பணத்தை விட மிகவும் அவசியம். ஆனால் அந்த அன்பு நாளாக நாளாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சிந்திக்க வேண்டும்

நீங்கள் யாரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று உங்களது சுய சிந்தனையுடன் யோசியுங்கள். இருவரில் யார் நீண்ட கால நிலையான உறவிற்கும் உங்களது காதலுக்கும் தகுதியானவர் என்பது குறித்து சிந்தித்து பாருங்கள். நீங்கள் சிந்திக்கும் போது திருமண உறவின் ஒவ்வொரு படிநிலைகளிலும் யார் உங்களக்கு சிறந்த ஜோடியாக இருப்பார். என்பதை நீங்கள் யோசியுங்கள்.

நீங்களே பொறுப்பு

ஒருவேளை உங்களுக்கு, உங்களது காதலரை தான் பிடித்திருக்கிறது என்றால், நீங்கள் தயங்காமல், உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டவரிடன் போய் மேற்படி ஏற்படுகளை நிறுத்திவிடுமாறு சொல்லிவிடுங்கள். அதற்கான முழு பொறுப்பையும் நீங்களே ஏற்க வேண்டும்.

காரணம் தேட வேண்டாம்

ஒருவரை மனதில் நினைத்துக்கொண்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்வது கூடாது. அதற்காக பணம் வசதி வாய்ப்புகளை மட்டும் அடிப்படையாக கொண்டும் திருமணம் செய்து கொள்வது கூடாது.