அவுஸ்திரேலிய தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறிய போது இந்திய ரசிகர்கள் கூச்சலிட்டு அவரை கிண்டல் செய்தனர்
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது,
இந்த போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. அந்த அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் வெறும் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் உமேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
ஸ்மித் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும் போது மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் சத்தமாக கூச்சலிட்டு அவரை கிண்டல் செய்தனர்
அதே போல நேற்றைய போட்டியில் அதிரடியாக சதமடித்த டேவிட் வார்னர், 124 ஓட்டங்களில் அவுட்டாகி வெளியேறும் போதும் இந்திய ரசிகர்கள் அவரை நோக்கி கிண்டலாக சத்தம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.







