கடவுளாக தெரிவு செய்யப்பட்டுள்ள நேபாளத்தின் சிறுமி திரிஷ்னா ஷக்யா

நேபாளத்தின் குமாரியாக மூன்று வயது சிறுமி திரிஷ்னா ஷக்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார்

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

நேபாளத்தில் சிறுமிகளை கடவுளாக போற்றுவது வழக்கம், மூன்று வயதில் தெரிவு செய்யப்படும் சிறுமி பூப்படையும் வரை கடவுளாக போற்றப்படுவார்

இவ்வாறு தெரிவாகும் சிறுமி காத்மாண்டுவின் தர்பார் சதுக்கத்தில் உள்ள மன்னர் அரண்மனையில் தங்க வைக்கப்படுவார், இவர்களது கால்கள் தரையில் பட்டால் பாவமாகும்.

வருடத்திற்கு 13 முறை மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர்
கடந்த 2008ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட சிறுமி பூப்படைந்து விட்டதால், நேபாளத்தின் குமாரியாக நான்கு சிறுமிகள் போட்டியிட்டனர்.
இந்நிலையில் பல்வேறு நிலைகளை கடந்து மூன்று வயது சிறுமியான திரிஷ்னா ஷக்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு தெரிவாகும் சிறுமியின் இளமைப் பருவம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது, மேலும் பூப்படைந்து வெளியே வரும் சிறுமி உலகத்தை எதிர்கொள்வது கடினமாக உள்ளதாம்
இதற்கிடையே சமீபகாலமாக இம்முறைக்கு மக்களிடையே ஆதரவும் குறைந்து வருகிறதாம்