அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது
அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பரிசுக்குத் தகுதி பெற்றவர்களின் பட்டியலை அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது.
சுயாதீன மதிப்பீடுகளின் அடிப்படையில், அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம், 2002ஆம் ஆண்டு முதல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படக் கூடியவர்களின் தகுதிப் பட்டியலை வெளியிட்டு வருகிறது
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்படக் கூடியவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரையும் உள்ளடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இவருக்கு இந்தப் பரிசை அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது






