பிரித்தானிய பிரதமர் தெரசா மே எச்சரிக்கை

உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க போக்குவரத்து ஒழுங்குமுறைத்துறை மறுப்பது அளவுக்கு மீறிய செயல் எனவும், இதனால் பலர் வேலையை இழக்க நேரிடும் என்று பிரித்தானிய பிரதமர் தெரசா மே கூறியுள்ளார

_90368281_034027724-1

பிரபல கார் புக்கிங் நிறுவனமாக உபேர் நிறுவனத்தின் உரிமம் லண்டனில் வரும் 30-ஆம் திகதியுடன் முடிவடைகிறது

இதனால் உரிமத்தை புதுபிக்க அந்நிறுவனம் போக்குவரத்து ஒழுங்குமுறைத் துறையை நாடியுள்ளது.

அப்போது போக்குவரத்து ஒழுங்குமுறை துறை உரிமத்தை புதுபிக்க மறுப்பு தெரிவித்ததுடன், உபேரின் அணுகுமுறை மற்றும் நடத்தையானது பொறுப்பில்லாமையை நிரூபிக்கின்றது என்றும் அந்நிறுவனத்திடம் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இல்லை எனவும் காரணம் கூறி புதுபிக்க மறுத்துள்ளது

இன்னும் இரண்டு நாட்களே மீதம் உள்ளாதால், உரிமத்தை புதுபிக்கவில்லை எனில் அடுத்த மாதம் லண்டன் நகரில் இந்நிறுவனம் இயங்க முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில் இது குறித்து பிரித்தானிய பிரதமர் தெரசா மே, பிரித்தானிய தலைநகரான லண்டனில் உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க போக்குவரத்து ஒழுங்குமுறை துறை மறுப்பது அளவுக்கு மீறிய செயல் என நான் கருதுவதாகவும் இதனால் பலர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.