தியேட்டர்களில் டீசர்! மெர்சல் குழுவின் லேட்டஸ்ட் பிளான்

விஜய் டாக்டர், மேஜிக் கலைஞர், ஊர் தலைவர் என மூன்று வேடங்களில் நடிக்கும் மெர்சல் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. படத்தின் டீசர் வரும் செப்டம்பர் மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிப்புகள் வந்துவிட்டது.

201706221209426832_mersal-title2._L_styvpf

இப்படத்தின் இயக்குனர் அட்லியின் பிறந்தநாள் சிறப்பாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் வழக்கம் போல ட்ரண்டிங் செய்ய ரசிகர்களின் ஏக்கம் ஒரு பக்கம்.

தற்போது தியேட்டர்களிலும் படத்தின் டீசரை வெளியிட பிளான் செய்திருக்கிறார்களாம். அதாவது வரும் வரும் 29 ம் தேதி முதல் தியேட்டர்களும் மெர்சல் மயமாகும். அதே நாளில் தான் கருப்பன், ஸ்பைடர் என விஜய் சேதுபதி, மகேஷ் பாபு ஆகியோரின் படங்கள் ரிலீஸ் ஆகிறது.