இலங்கையில் உயிரை உருக்கி விளையாடும் மாணவர்கள்; அதிர்ச்சி ஆய்வுகள்!

ஸ்ரீலங்காவில் அதிகளவிலான பாடசாலை மாணவர்கள் புகைப் பிடிப்பதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகாரசபையின் தலைவர் டொக்டா பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் உயிரை உருக்கி விளையாடும் மாணவர்கள்; அதிர்ச்சி ஆய்வுகள்!

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

”ஸ்ரீலங்காவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் சுமார் 45000 தொடக்கம் 50000 வரையிலான பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கின்றார்கள். இதில் 15 முதல் 17 வயதான பாடசாலை மாணவர்களே அதிகளவில் புகைப் பிடிக்கின்றார்கள்.

வரிமுறைமை ஒன்று புகைப் பிடித்தலைக் குறைப்பதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அப்பாவி உயிர்களை காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் எந்த வகையிலும் கைவிடப்பட மாட்டாது.” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.