பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, ஊர்வசி, சரண்யா மோகன், பானுப்பிரியா என பெண்களாக நடித்துள்ள படம் மகளிர் மட்டும். ஆனால் புரமோஷமன் என்னவோ ஒவ்வொரு ஆண்களும் பார்க்க வேண்டிய படம் என்று தான்.
நல்ல விமர்சனங்களும், நிகர வசூலும் இருந்து வருகிறது. குறிப்பாக படம் பல தரப்பு பெண்களையும் கவர்ந்துள்ளது. ரசிகைகளில் ஒருவரான வசந்தி என்ற பெண் தன் தோழிகளை கண்டுபிடித்து கொடுங்கள் என போட்டோவை அப்பட நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளாராம். இது சமூக வலைதளங்களிலும் வந்துள்ளது.
இந்த விசயம் தெரிந்து பல பெண்கள் இதுபோல கிளம்பிவிட்டார்களாம்.