கொழும்பை அண்மித்த அளுத்கம பகுதியில் உதவி செய்வதாக கூறி பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்த நபர் ஒருவரின் வாயிலிருந்து ஒரேயொரு பல்லை அடித்து உடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பல்லை இழந்த 60 வயதுடைய குறித்த நபர் வெட்கத்தின் காரணமாக தன்னை பெண்ணின் கணவர் தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை செய்த போது பதில் நீதவான் சிறி பெரேரா இருவரையும் பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.