தீக்குளித்த தாயை காப்பாற்ற முயன்ற 3 பெண் பிள்ளைகள் பலி!

மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் மௌசிபுரா கிராமத்தில் வசித்து வந்த ராணி லோதி என்ற தாயாரின 3 பெண்குழந்தைகள் இவ்வாறு பலியாகியுள்ளனர்.

201705201652472624_Peravurani-near-woman-fire-death_SECVPF

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.தன்னுடைய உடலில் தீ வைத்து தற்கொலைக்கு குறித்த பெண் முயற்சித்த வேளையில் இதைக் கண்ட அவருடைய பெண் குழந்தைகள் துல்சா, மஸ்கான் மற்றும் மான்சி மூவரும் தாயை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த நால்வரும் தமோவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ராணி 70 சதவிகித படுகாயங்களுடன் உயிருக்கு போராடிவரும் நிலையில், அவரை காக்க முயன்ற 2 முதல் 7 வயது வரையான குழந்தைகள் மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.

நீண்ட காலமாக தனக்கிருந்த வயிற்று வலி தாங்க முடியாமலும், அதற்கு சிகிச்சை செய்ய முடியாமலும்தான் தற்கொலைக்கு முயன்றதாக பொலீஸ் விசாரணையில் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் கூடுதல் சந்தேகம் தெரிவித்துள்ளார்