மூன்றாம் உலகப்போரை முன்னெடுக்கும் வடகொரியா

வடகொரியாவின் அடாவடியை பார்க்கும் போது மூன்றாவது உலகப்போர் வட கொரியாவை மையப்படுத்தி வெடிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. அடுத்தடுத்து ஏவுகணை சோதனை செய்துவரும் வடகொரியா, நேற்று மேலுமொரு கண்டம் விட்டு தாவும் ஏவுகணை ஒன்றை ஜப்பான் வான் வழியில் செலுத்தி சோதனை நடத்தியிருக்கிறது.

download (12)

வடகொரியா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை சோதனை செய்ததாகவும் தகவல்கள் பரவுகிறது. இந்த வருடத்தில் வட கொரியா நடத்தும் பதினைந்தாவது ஏவுகணை சோதனை இது.அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மற்றும் ஐ நா சபையும் எத்தனை முறை கண்டனம் தெரிவித்தும் வட கொரியா அசைந்து கொடுப்பதாக இல்லை.

இந்தநிலையில், மூன்றாம் உலகப் போர் மூளும் போது பேச ஒரு உரையை 1983 ஆம் ஆண்டே தயார் செய்து வைத்திருக்கிறார் இங்கிலாந்து ராணி. இந்த உரை 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத் மூன்றாம் உலகப் போருக்காக தயார் செய்து வைத்திருக்கும் உரையின் குறுகிய வடிவம் :

“ 1939 ஆம் ஆண்டின் அந்த துயர் மிகு நாளில் (இரண்டாம் உலகப் போர் தொடங்கிய நாள்) நானும் என் தங்கையும் நர்சரி ஒன்றில் வயர்லெஸ் செட்டில் என் அப்பாவின் உரையை கவலையோடும், பெருமையோடும் கேட்டதை எப்போதும் மறக்கவில்லை.இன்று நாம் சந்திக்கும் அபாயம் முன்னெப்போதும் சந்திக்காததை விட கொடிது என்பதை நாம் அறிவோம். நம் எதிரி துப்பாக்கி சுமந்து நிற்கும் ராணுவ வீரனோ, வானில் நோட்டமிடும் விமானப்படையோ அல்ல, தவறாக பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் தான்.

நான் உங்களுக்கு சொல்லும் செய்தி மிக எளிமையானது. வலியோருக்கு உதவுங்கள், வீடில்லாதோருக்கு ஆறுதல் கொடுங்கள். புதிய தீமை ஒன்றை நாம் போராட தொடங்கும் இவ்வேளையில், நம் நாட்டிற்காக பிரார்த்தனை செய்வோம்.

கடவுள் உங்கள் ஆசீர்வதிப்பாராக”.

என்று போகிறது அந்த உரை. உண்மையில் இந்த உரையை வாசிக்கும் சூழல் வந்து விடுமோ என்பதைத்தான் கொரிய அனுபவங்கள் எடுத்துக்காட்டுகிறது.