பிரபாகரனின் தலைமையில் ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’ எப்படி உருவாகினார்கள்?

1972ஆம் ஆண்டு செட்டி தமிழ் புதிய புலிகள் எனும் அமைப்பை உருவாக்கும் போது பிரபாகரன், எனது அண்ணா காண்டீபன், பெரிய சோதி போன்றோர் அதில் பகுதிகளாக இருந்தனர்.

Prabhakaran leader

அதன் பின்னரே பிரபாகரன் தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் அமைப்புடன் பிரிந்து சென்றார், என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் இளைய புதல்வரான பகீரதன் தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அண்ணன் சிவகுமாரனின் காலப்பகுதியில் இந்தியாவில் எழும்பூரில் குண்டு வெடிப்புக்கள் ஏற்பட்டன.

அந்த குண்டு வெடிப்புகளுடன் தொடர்புபட்ட குற்றத்திற்காகஅண்ணன் காண்டீபன் தண்டனை பெற்று இலங்கைக்கு வந்தார். அப்போது தமிழ் இளைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அதன் பலனாக செட்டி தமிழ் புதிய புலிகள் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்த அமைப்பிலிருந்து பிரபாகரன் பிரிந்து சென்றவுடன் எனது அண்ணா காண்டீபன் அரசியல் அடைக்கலம் கோரி இங்கிலாந்துக்கு சென்றார்.

விடுதலைப்புலிகள் உள்ளிட்ட அனைத்து இயக்கத்தினரையும் நான் அறிவேன். நான் மதுரையில் இருக்கும் போது கிட்டு அங்கே வருவார். கலந்துரையாடுவார், புலிகளுடன் அவ்வாறான உறவே எனக்கு இருந்தது என தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, மன்னார் ஜெயராஜா தலைமைத்துவத்தில் “தமிழீழ தேசிய இராணுவம்” எனும் அமைப்பை உருவாக்கினோம்.

இதை விடுதலைப்புலிகளும், தமிழர் விடுதலைக்கூட்டணியும் விரும்பவில்லை. இதனால் விடுதலைப்புலிகள் 1986ஆம் ஆண்டு ஜெயராஜாவை கொலை செய்தார்கள் என பகீரதன் அறிவத்துள்ளார்.