இறைவி படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. மேலும் மாயா படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இறவாக்காலம் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதுதவிர ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடித்திருக்கும் ஸ்பைடர் படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மேலும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் விஜய்யின் மெர்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழில் ஜெயம் ரவி – அரவிந்த் சாமி – ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘போகன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் இந்த படத்தை இயக்கிய லஷ்மண் தெலுங்கு பதிப்பையும் இயக்க இருக்கிறார். இதில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்க ரவி தேஜா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஹன்சிகா கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.