ஆட்கடத்தலை தடுக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா- அவுஸ்ரேலியா கைச்சாத்து

ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில், அவுஸ்ரேலியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன.

aus-lanka-sign

கன்பராவில், நேற்று நடந்த நிகழ்வில், அவுஸ்ரேலியாவின் சார்பில் குடிவரவு மற்றும் எல்லா பாதுகாப்பு  திணைக்களத்தின் செயலர் மைக்கேல் பெசுலோவும்,  சிறிலங்காவின் தரப்பில் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

ஆட்கடத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்கும், ஆட்கடத்தல் முறைகள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், இடைமறித்தல் மற்றும் ஆட்கடத்தல்காரர்களை விசாரணை செய்வதற்கும், இந்த உடன்பாடு வழிசெய்கிறது.

ஆட்கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா அதிகாரிகளுக்கு அவுஸ்ரேலியா பயிற்சிகளை அளித்து அவர்களின் திறனை பலப்படுத்தவும் இந்த உடன்பாடு வழி செய்கிறது.