அமைச்சர் சரத் பொன்சேகா ஒரு பைத்தியம் – விமல் வீரவன்ச

அமைச்சர் சரத் பொன்சேகா ஒரு பைத்தியம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

vimal-weerawansa

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ஜெனரல் ஜயசூரிய மீது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தினேஸ் குணவர்த்தன கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இததையடுத்து, நடந்த விவாதத்தில் ஆவேசமாக உரையாற்றிய விமல் வீரவன்ச,

“ அமைச்சர் சரத் பொன்சேகா என்ன பைத்தியமா? முன்னாள் இராணுவ ஜெனரல் ஒருவர் போர்க்குற்றங்களை இழைத்தார் என்று அமைச்சர் ஒருவர் குற்றம்சாட்டுவது ஒன்றும் சிறிய விடயமல்ல.

அவர் ஒரு பைத்தியக்காரன்” என்று கூறினார்.