தற்போதைய அரசாங்கம் மாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளை கேட்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பௌத்த மாநாயக்க தேரர்களினால் வழங்கப்படும் ஆலோசனை வழிகாட்டல்களை தற்போதைய அரசாங்கம் எந்த வகையிலும் செவிமடுப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தினால் புண்ணிஸ்தலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாகவே அரசாங்கம் ஏதேச்சாதிகார போக்கில் செயற்படுவது அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள விஹாரை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.