உலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த மைத்திரி – ரணில்!

skmdc

2025 இல் வளமான நாடு என்ற தொனிப்பொருளில் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைப் பிரகடன மாநாடு நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒரே வாகனத்தில் வந்திறங்கிய சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

இந்த பயணம் உலக சாதனையாக அமைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் இணைந்து மேற்கொள்ளும் அரசியல் குறித்து சாதகமான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மைத்திரி – ரணில் தலைவர்களிடையே ஆழமான அரசியல் இணக்கப்பாடுகள் மற்றும் புரிந்துணர்வுகள் உள்ளதாகவும், அதற்கமைய 2025ஆம் ஆண்டு வரை ஆட்சியை கொண்டு செல்வதென்பது இலகுவான விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பலம்வாய்ந்த பதவியில் வகிக்கும் அரசியல் தலைவர்கள் இணைந்து ஒரே வாகனத்தில் பயணித்த சம்பவங்கள் இதுவரை இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.<