தற்கொலை தாக்குதலில் தகர்க்கப்படவிருந்த விமானம்! சாதுர்யமாக செயற்பட்ட அதிகாரிகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி செல்லவிருந்த விமானத்தில் தற்கொலைத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், அத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் லெபனான் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்ரேலியாவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் விமானத்தின் மீதே இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகும், எனினும் குறித்த தாக்குதல் முயற்சியினை முறியடித்துள்ளதாக லெபனான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லெபனானை சேர்ந்த தற்கொலை குண்டுதாரி ஒருவரே இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

aeroplane-ba-story

அவுஸ்திரேலியாவிலிருந்து அபுதாபிக்கு செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் இடம்பெறவிருந்த அனர்த்தத்தை எங்கள் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர்,லெபனான் பிரஜை ஒருவரே இதனை செய்வதற்கு திட்டமிட்டார்.

தரகெகையாட் என்ற லெபனான் தற்கொலை குண்டுதாரியே இந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

இத் தாக்குதல்தாரியுடன் வேறு மூன்று பேரும் தொடர்புபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, சந்தேக நபர்களில் மற்றொரு நபர் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் மூத்த உறுப்பினராக இருக்கின்றார் என்று லெபனான் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத் தாக்குதலில் நான்கு சகோதரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகித்துள்ள லெபனான் புலனாய்வு அமைப்பு அவர்கள் தொடர்பாக தீவிர கண்காணிப்பை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விமானம் புறப்பட்டு 20வது நிமிடத்தில் தாக்குதல் நடத்துவது தான் அவர்கள் திட்டமாக இருந்துள்ளது. எனினும் பயணப் பொதிகளில் இதை சாத்தியமாக்குவது கடினம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நான்கு சகோதரர்களில் ஒருவரால் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாண்டி கடந்து செல்ல முடியவில்லை என்றும், தெரிவித்துள்ளனர். எனினும் இதனை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தில் 120 லெபனான் நாட்டவர்கள் உட்பட 400 பயணிகள் இருந்துள்ளனர். அதிகாரிகளின் சாதுர்யமான சோதனை நடவடிக்கையினால் இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.