விமானக் கொள்வனவு மோசடி! சீன பிரஜைக்கு கொழும்பு நீதிமன்றம் கொடுத்த அதிரடி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் ஆட்சியில் மிஹின் லங்கா நிறுவனத்திற்கு இரு விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் முக்கிய பிரதிநிதியாக செயற்பட்ட சீன நாட்டவரின் சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்கை பரீட்சிப்பதற்கு கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன நேற்று (21)அனுமதி வழங்கியுள்ளார்.

42_big

ரூபா 4 கோடி 9 லட்சத்து 54,813 அமெரிக்க டொலர் செலவில் 2011 ஆம் ஆண்டு தருவிக்கப்பட்ட இரு விமானங்கள் தொடர்பில் நிதி மோசடி பிரிவு விசாரணை நடத்தி நீதிமன்றித்திற்கு அறிவித்திருந்தது.

இது தொடர்பில் நிதி மோசடி பிரிவு விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான், சீனப் பிரஜையின் வங்கி கணக்கை பரீட்சிக்க அனுமதி வழங்கினார்.

இரு விமானங்களும் 2009 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டதோடு அவை 2011 ஆம் ஆண்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக நிதி மோசடி பிரிவு தெரிவித்தது. அவை இலங்கை விமானப்படைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த கொடுக்கல், வாங்கல்களில் தொடர்புபட்டிருந்த சீன நாட்டவர் இலங்கையில் இருந்து செயற்பட்டதாகவும், அவரின் இரு வங்கிக் கணக்குகளையும் பரீட்சிக்க அனுமதிக்குமாறும் நிதி மோசடி பிரிவு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது.

வங்கி கணக்குகளை ஆராய்ந்து சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.