பூமிக்கு வரும் பாரிய அழிவு! தடுக்கும் தீவிர முயற்சியில் நாசா

அபாயகரமான எரிமலைகளில் ஒன்றான அமெரிக்காவில் உள்ள எல்லோஸ்டோன் கால்டெரா எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

naasa

குறித்த எரிமலை தற்போது வெடிக்கும் கட்டத்தினை நெருங்கியுள்ளதாகவும் இதில் இருந்து கடுமையான வெப்பம் வெளியேறி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உலகில் காணப்படும் அபாயகரமான எரிமலைகளில் முக்கிய இடத்தினை கால்டெரா எரிமலை பெற்றுள்ளது. இந்த எரிமலை 6 இலட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே வெடிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

மேலும் இந்த எரிமலை வெடித்தால் அதனால் ஏற்படும் கடுமையான தூசு மற்றும் எரிமலைச் சாம்பல் பூமிக்கு பாரிய விளைவினை ஏற்படுத்துவதோடு மனிதர்களுக்கும் கடும் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

வருடங்களுக்கு முன்னர் 1980 ஆம் ஆண்டு வெடித்த அமெரிக்காவின் செயின்ட் ஹெலன்ஸ் எரிமலையினை விடவும் 1000 மடங்கு அதிக தாக்கத்தினை கால்டெரா ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த எரிமலை வெடிக்குமானால் அதனால் ஏற்படும் தூசு விண் படலத்தில் மேகக் கூட்டத்தில் படிந்து விடுவதால் பல பகுதிகளுக்கு சூரிய ஒளி கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்படக் கூடும்.

அத்துடன் இதனால் வெளிப்படும் தீப்பிழம்பும்,கரியமில வாயுவும்,கரும்புகையும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் சீற்றமடைந்துள்ள கால்டெராவின் வெடிப்பினால் ஏற்படும் கடுமையான வெப்பத்தில் இருந்து பூமியை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 2.7 பில்லியன் பவுண்ட் செலவில் குறித்த எரிமலையினைச் சுற்றி 10 கிலோமீற்றர் அளவு ஆழத்திற்கு துளையிட்டு அதற்குள் தண்ணீரை பாய்ச்ச விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் காரணமாக எரிமலையின் வெப்பம் தணிவதுடன் வெடிப்பினை தடுத்து நிறுத்த முடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.