செவ்வாயும் பூமி போன்ற ஓர் கிரகம் – நாசா

பூமியைத் தாண்டி உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறுகள் உள்ளதா என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக விடைகளைத் தேடிவரும் நாசா செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமான சூழலை உருவாக்க ஆரம்பித்துள்ளது.

201603261345362126_SHOCK-CLAIM-Aliens-have-been-discovered-living-HERE-on_SECVPF

இதற்காக செவ்வாயில் ஒக்சிஜனை உருவாக்கும் புதிய முயற்சியினை நாசா செயற்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது.

செவ்வாயில் 0.13 சதவிகித அளவிலேயே ஒக்சிஜன் வாயு உள்ளது இதன் காரணமாக அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறு மிகக்குறைவு. இதனால் ஒக்சிஜனை உருவாக்கும் பாசிகள் மற்றும் பக்றீரியாக்களை விண்கலங்கள் மூலமாக கொண்டு செல்ல நாசா திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது. இதற்காக தொடர்ந்தும் கியூரியாசிட்டி விண்கலம் மூலமாக செவ்வாயினை ஆராய்ச்சி செய்து வருகின்றது நாசா.

நாசாவின் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்படும் எனின் மனிதர்களும் இனி வேற்றுக்கிரகவாசிகளாக மாறி விடுவார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் செவ்வாயும் பூமி போன்றே காணப்பட்டதாகவும் எதிர்பாராத விதமாக பாரிய விண்கல் மோதிய காரணத்தினாலேயே செவ்வாய் அழிவடைந்ததாகவும் விஞ்ஞானிகள் நம்பி வருகின்றனர்.

இதனால் தொடர்ந்தும் செவ்வாயில் மனிதர்களை குடியேறச் செய்யும் ஆய்வு முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.