இலங்கையின் கலாச்சாரத்தை மேம்படுத்த மியன்மாரிலிருந்து யானைகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மியன்மார் நிறுவனம் ஒன்றினால் இலங்கையில் கலாச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவென வழங்கப்பட்ட 24 வயதுடைய யானை இன்று மாலை திருகோணமலைத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பான் சீவ் மொங் என அழைக்கப்படும் குறித்த 8 அடி உயரமுடைய ஆண் யானை மியன்மாரிலிருந்து ஒரு கோடியே முப்பத்து ஐந்து லட்சம் ரூபா செலவில் தனிப்பட்ட கப்பல் ஒன்றின் மூலமாக திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

miyanmaar

திருகோணமலை துறைமுகத்தில் இறக்கப்பட்ட குறித்த யானையை கண்டி தலதா மாளிகையின் திவடன நிலமே பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த யானையுடன் இரு பாகன்கள் மற்றும் ஒரு மிருக வைத்தியரும் இலங்கைக்கு வந்தடைந்ததுடன் அவர்கள் இங்கு மூன்று மாத காலம் தங்கியிருந்து இலங்கையின் கலை, கலாச்சார விழுமியங்களில் குறித்த யானை பங்குபற்றுவதற்காக தயார் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.