இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்பளித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
“ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா, இலங்கை கடற்படையில் பல தசாப்தங்களாக விசுவாசத்துடன் சேவையாற்றியுள்ளார். இன்று இவர் கடற்படையின் புதிய தளபதியாக பதவியேற்றுள்ளார்.” என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்குப் பின்னர் முதன் முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா இன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.







