காமெடி நடிகர் அல்வா வாசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..!

காமெடி நடிகர் ‘அல்வா’ வாசுவின் சொந்த ஊர் மதுரை. ஏழ்மையான குடும்பம். இவர் அவரது பட்ட படிப்பை முடித்துவிட்டு சென்னை கோடம்பாக்கத்தை நோக்கி வந்து பல கஷ்டங்களுக்கு பிறகு சில படங்களில் காமெடி நடிகராக நடித்தவர். தற்போது, இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்கள் அவரைக் கைவிட்ட நிலையில், அவரது குடும்பம் மிகவும் பாதிப்படைந்து சோகத்தில் இருந்தது.

actor

அதைத்தொடர்ந்து, விஷால் உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரின் மருத்துவ செலவிற்கு உதவியது. ஆனால், இவருக்கு இறுதி கட்ட பிரச்சனை என்பதால் தற்போது இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனின்றி ருக்மணி பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தான். அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.