மீண்டும் இரண்டாவது திருமணம் இருக்குமா ? மனம் திறந்த அமலாபால்

தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் காதலியாக நடித்த அமலாபால், இரண்டாம் பாகத்தில் மனைவியாக அசத்தியுள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டிகளில் பிஸியாக இருக்கிறார்.

Amala-Paul-Cute-Photos- (1)-759801

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது திருமண முறிவு பற்றி மனம் திறந்துள்ளார், அதாவது விஜயுடன் வாழ்ந்த வாழ்க்கை மோசமானதாக இல்லையென்றாலும் மகிழ்ச்சியை தரவில்லை. இந்த மணமுறிவு எனக்கு மனவலியை தந்தது. அதே நேரத்தில் ஒரு அனுபவத்தையும் கற்று கொடுத்தது . சில நேரங்களில் நம்மை மீறி சில விஷயங்கள் நடக்கத்தான் செய்யும், எல்லாமே என் எதிர்கால நன்மைக்கே என்றே கருதுகிறேன்.

மேலும் எனக்கு 23 வயதில் திருமணம் நடந்தது, இன்னுமும் பக்குவப்பட வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. அதிக அனுபவங்கள் வேண்டும் என்று நினைக்கிறேன். அதன் பிறகு தான் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன் என கூறினார்