காலியில் திடீரென உள்நோக்கி போன கடல்! சுனாமி ஆபத்தா?

காலி கோட்டைக்கு அருகில் உள்ள கடல் நீரானது உள்ளோக்கி சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் நீரானது உள்வாங்கியுள்ளதை அங்கிருந்த நபர் ஒருவர் தனது கைத் தொலைபேசியில் காணொளியெடுத்து. சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த நபர் குறிப்பிடும் பொழுது, சுமத்திரா தீவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் தொடர்பாக தான் அறிந்திருக்கவில்லை எனவும், கடலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தினை அடுத்த தான் அதனை படமாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் சிறிது நேரத்திற்குப் பின்னர், இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தது.

சுனாமி நிச்சயமாக ஏற்படும் என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதற்காக மாத்திரமே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.