அணுசக்தி வலிமையை வலுப்படுத்துவதில் இருந்து பின் வாங்க மாட்டோம் வடகொரியா

எங்கள் அணுசக்தி வலிமையை வலுப்படுத்துவதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின் வாங்க மாட்டோம் என வடகொரியா கூறி உள்ளது.
annu
சியோல்

ஜூலை மாதம் இரண்டு கண்டம் வீட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா, தற்போது அமெரிக்காவைத் தாக்கும் அளவுக்கு ஆயுத வல்லமை தங்கள் நாட்டிடம் உள்ளதாகக் கூறியது. எனினும், அந்த ஏவுகணைகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தாக்குமா என்பதை நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவால் கண்டிக்கப்பட்ட அந்த சோதனைகள், ஐ.நாவின் புதிய தடைகளுக்கு வித்திட்டன.

ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி, நிக்கி ஹேலி, தற்போதைய தலைமுறையில் வேறு எந்த நாட்டையும்விட வட கொரியா மிகவும் கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருவதாகக் கூறி இருந்தார்.

இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட வடகொரியா மீது திணிக்கப்பட்ட ஐ.நா.வின் சமீபத்திய தடைகளுக்கு வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. தடையின் மூலம் அதன் இறையாண்மை மீறப்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் வட கொரிய மத்திய செய்தி நிறுவனத்திடம் கூறி உள்ளனர்.

அமெரிக்காவிற்கு எதிராக ஒரு விரோத கொள்கை கடைபிடிக்கிறது.   நீண்ட பேச்சுவார்த்தையில் அதன் அணுசக்தி திட்டம் குறித்து வைக்காது என்று வடகொரியா முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள். வட கொரியா என்ன நடவடிக்கை எடுக்கும் என அவர்கள் விவரிக்கவில்லை.

அமெரிக்காவின் கடலோரப் பகுதி முழுவதும் அதன் நிலம் பாதுகாப்பாக இருப்பதாக நம்புவதைவிட பெரிய தவறு எதுவுமில்லை என வட கொரியா மத்திய செய்தி நிறுவனம் கூறி உள்ளது.

அமெரிக்காவில் இருந்து  அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது “நாங்கள் பேச்சுவார்த்தை மேசை மீது நமது சுய-தற்காப்பு அணுகுண்டு  ஆயுத விவகாரங்களை  வைக்க மாட்டோம்.   “எங்கள் அணுசக்தி வலிமையை வலுப்படுத்துவதில் இருந்து நாங்கள்  ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். இவ்வாறு  செய்தி நிறுவனம் கூறி உள்ளது.