மட்டக்களப்பு மாமாங்கம் சதா சகாய மாத ஆலய திருவிழா

மட்டக்களப்பு – மாமாங்கம் சதா சகாய மாத அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

m2

குறித்த நிகழ்வு இன்று மாலை 6.20 மணியளவில் பங்கு தந்தை தலைமையில் கொடியேற்றப்பட்டு, விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சதா சகாய அன்னை ஆலயமானது பழமை வாய்த்த ஆலயங்களில் ஒன்றாக விளங்குவதுடன், மிகவும் பிரசித்தி பெற்ற மாத ஆலயமாகவும் கருதப்படுகின்றது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்திருவிழா எதிர் வரும் ஞாயிற்று கிழமை நிறைவு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,இந்த திருப்பலியை தொடர்ந்து மாமாங்கம் ரெட்ணம் விளையாட்டுக் கழகத்தினரால் அன்னதானமும் வழங்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

m1

m3

m4