தமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு

உலகில் முதல் மனிதன் எப்போது தோற்றம் பெற்றானோ அப்போதே தமிழ் மொழியும் தமிழ் இனமும் (Great tamil peoples) தோற்றம் பெற்று விட்டது.

உலகின் முதல் மனிதன் தோன்றிய இடம் என வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்பட்ட இடம் கி.மு 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர்களின் ஆட்சியே குமரிக்கண்டம்.

49 நாடுகளையும், பறளி..குமரி போன்ற வளம்மிக்க ஆறுகளையும், குமரி மலை..மணி மலை போன்ற மலைகளையும், தென்மதுரை, கபாடபுரம் போன்ற செழிப்பான நகரங்களையும் கொண்ட மிகப்பெரிய தமிழ்க்கண்டம்  இன்று கடலுக்கடியில் உறங்கிக்கொண்டிருக்கும் உண்மை நம் எத்தனை பேருக்குத் தெரியும்..?

இன்று தனித் தனி நாடுகளாக உள்ள இந்தியாவின் கன்னியாகுமரி, அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா போன்ற நாடிகளை இணைத்த இந்த இடம் தான் குமரிக்கண்டம்.

ஒன்பதாயிரத்து தொளாயிரத்து தொண்ணூறு வருடங்கள் தொடர்ந்து மூன்று தமிழ் சங்கங்கள் நடைபெற்ற கண்டமும் குமரிக்கண்டமே ஆகும்.

பரிபாடல், பேரளதிகாரம், கலரிவிரை அகத்தியம், தொல்காப்பியம், பூத புராணம், அக நாணூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள், போன்ற நூல்கள் இயற்றப்பட்ட கண்டம்.

பிற்காலத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் முற்றாக அழிந்து போனது.

அதன்பின் தோன்றிய உலகத்தில் தமிழின் பொற்காலமாக தென்னிந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய மூவேந்தர்களின் ஆட்சி நிலவியது.

இவர்களில் சோழர்களின் ஆதிக்கமும் ஒன்று. இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான ராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் வங்காள விரிகுடா உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழ் பரவியது.