யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் உயிரை காப்பாற்றுவதற்காக உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திர, சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 17 வருடங்களாக யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாப்பாளராக பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திர செயற்பட்டார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், ஹேமச்சந்திர உயிரிழந்தார்.