வித்தியா கொலை வழக்கில் விஜயகலா மகேஸ்வரனுக்கு நெருக்கடி

VIJAYA

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையோடு தொடர்புடைய வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை நடைபெற்றது.

பிரதான சந்தேக நபரைத் தப்பவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் காணொளி ஒன்றை மன்றில் காண்பித்தனர்.

அதில் தற்போதைய ஸ்ரீலங்காவின் இராஜாங்க அமைச்சரான வியஜகலா மகேஸ்வரனும் நிற்கின்ற காட்சி பதிவாகியுள்ளது. அதாவது பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை மக்கள் பிடித்து வைத்திருந்தபோது அவரை மக்களிடமிருந்து விடுவித்த சம்பவத்தில் விஜயகலா மகேஸ்வரனும் ஈடுபட்டிருந்தமையினை குறித்த காணொளி ஆதாரபூர்வமாக காண்பித்தது.

காணொளியைப் பார்த்த நீதிபதி அதுகுறித்த விசாரணைகளை விரைவில் மன்றுக்கு சமர்ப்பிக்கும்படி குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் இந்தக் காணொளி குறித்த விசாரணை வரும்போது அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் சிக்கலில் மாட்டுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.