டுவிட்டரில் விஜய்யின் மெர்சல் படம் செய்த சாதனை- கொண்டாடும் ரசிகர்கள்

MER

விஜய்யின் மெர்சல் படத்தில் விஜய் கதாபாத்திரத்தை முழுமையாக பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்தின் ஃபஸ்ட் லுக்கை அடுத்து பாடல்கள் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியாக இருப்பதாக அண்மையில் படக்குழு அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விஜய்யின் மெர்சல் ஃபஸ்ட் லுக் டுவிட்டரில் இதுவரை 50K ரீடுவீட்டுக்கள் ஆகியிருக்கிறது. டுவிட்டரில் முதல்முறையாக ஒரு ஃபஸ்ட் லுக் இத்தனை முறை ரீ டுவிட் செய்திருப்பது இதுவே முதன்முறையாம்.

இந்த சந்தோஷத்தில் ரசிகர்கள் #MersalFL50kRT என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்