வித்யா கொலை வழக்கு டி.ஐ.ஜி லலித் ஜயசிங்க இன்று நீதிமன்றில் ஆஜர்: பிணையில் விடுவிக்கப்படுவாரா!!

d.i.g

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த கொலை வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் சுவிஸ் குமார் என்பவரை கொழும்புக்கு தப்பிச் செல்வதற்கு உதவியமைக்காக லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவர் பிணையில் விடுவிக்கப்படலாம் சில தரப்புகள் தெரிவித்து வருகின்ற நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்படுவாரா அல்லது தொடர்ந்து விளக்கமறியலில் நீடிக்கப்படுவாரா என்பது இன்று தெரியவரும்.

இதேவேளை, லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடைநிறுத்தக் கோரி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விடுத்திருந்த நிலையில், அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.