காரைதீவுப் பிரதேசத்தில் நடமாடும் பொலிஸ் நிலையம் உத்தியோகப் பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

k

ஊருக்கு ஒரு பொலிஸ் நிலையம் எனும் பொலிஸ்மா அதிபரின் சிந்தனைக்கமைவாக பிரதேச மெங்கும் பொலிஸ் உப பொலிஸ் நிலையம் அதாவது நடமாடும் சேவை அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையிலே சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள காரைதீவுப் பிரதேசத்திற்கான ஊருக்கு ஒரு பொலிஸ் நடமாடும் பொலிஸ் நிலையத்தை (24.07.2017) உத்தியோகப் பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல்பியலால் தலைமையில் இடம் பெற்ற திறப்பு விழாவில் அம்பாறை பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் னுவான் வெத்தசிங்க கலந்து கொண்டு உப பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்தார்கள். இந் நிகழ்வில் பிரதேசசபை செயலாளர் நாகராஜா, நிந்தவூர் பிரதேச செயலக உதவிச் செயலாளர் அதிசயராஜ் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்த கொண்டார்கள். பிராந்திய பொலிஸ்மா அதிபர் தனதுரையில் மக்களோடு மிகவும் நெருங்கிப்பழகி மக்களது பிரச்சினைகளை தேவைகளை தீர்ப்பதே இந்த நடமாடும் சேவையின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.

k1

k2