இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த குறித்தப் பெண், ஒரு நபரிடம் 16 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாவும் மேலுமொருவரிடம் 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவையும் பெற்று மோசடி செய்துள்ளார்.
அத்துடன் பொலிஸாரிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக கலஹா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட மஸ்கொள்ள பிரதேசத்தில் வீடொன்றைப்பெற்று அங்கு மாந்திரீகம் மூலம் தீராத நோய்களை குணமாக்குவதாக கூறி ஏமாற்று வேளைகளில் ஈடுபட்டு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் சந்தேக நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றையடுத்து நேற்றுமுன்தினம் குறித்த பெண் பொலிஸாரினால் கைது செய் யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணை களை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.







