நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தானாக இலங்கை காவல்துறையிடம் சரண் இடைந்துள்ளார்.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபரே இன்று காலை யாழ்ப்பாணம் காவல்நிலையத்தினில் சரணடைந்துள்ளார்.
நல்லூர் பகுதியை சேர்ந்த இந்நபர் மக்கள் படையினில் செயற்பட்டு பின்னர் படையினரது புலனாய்வு பிரிவினருடன் இணைந்து செயற்பட்டு வந்திருந்வரென அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே.






