உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்காக நெல்லியடி வணிகர் கழகத்தினரால் அன்பளிப்பு

an

யாழ்ப்பாணம் நல்லுர் துப்பாக்கிச்சூட்டில் பலியான மெய்ப்பாதுகாவலர் மற்றும் உபபொலிஸ் பரிசோதகராக உயர்த்தபட்ட ஹேமச்சந்திர அவர்களின் இறுதிக்கிரியைகளுக்காக வடமராட்சியின் நெல்லியடி வணிகர் கழகத்தினரால் 25000 ரூபா அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி உதையினை நெல்லியடி பொலிஸ் நிலையயத்தின் பொறுப்பதிகாரி, பியந்தவிடம் நேற்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி வர்த்தக சங்கத்தின் செயலாளர் சுரேரஞ்சன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதியின் உயிரை காப்பாற்ற தன் உயிரைத் தந்த ஹேமச்சந்திர தமிழ் மக்களின் மனங்களில் மதிப்புக் குரியவராகியுள்ளார். ஆகவே அவரின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கெடுக்கும் வகையில் நெல்லியடி வணிகர் கழகம் இந்த முன்மாதிரியான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக அதன் உபதலைவரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் அக்கட்சியின் வடமாகாணசபை உறுப்பினரருமான அகிலதாஸ் சிவக்கொழுந்து தெரிவித்தார்.

இந்த நிதி கையளிக்கும் நிகழ்வில் நெல்லியடி வணிகர் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் நிலைய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.