குழந்­தைகள் சாகும்­போது வெளி­நா­டு­களில் சுற்­றுப்­ப­ய­ணமா? மோடிக்கு 10 வயது சிறுவன் கடிதம்

ஒடிசா மாநி­லத்தில் மூளைக் காய்ச்­ச­லினால் 73 பேர் பலி­யா­கி­யுள்ள நிலையில் நீங்கள் வெளி­நா­டு­களில் சுற்­றுப்­ப­யணம் செய்­வது நியா­யமா? என்ற கேள்­வி­யுடன் பிர­தமர் மோடிக்கு பத்­து­வ­யது சிறுவன் எழு­தி­யுள்ள கடிதம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஒடிசா மாநி­லத்தில் பழங்­கு­டி­யின மக்கள் அதி­க­மாக வாழும் மல்­காங்­கிரி மாவட்­டத்­திற்­குட்­பட்ட 500இற்கும் அதி­க­மான கிரா­மங்­களில் ஜப்பான் மூளை­ய­ழற்சி நோய் படு­வே­க­மாக பரவி வரு­கி­றது.

பெரும்­பாலும் குழந்­தை­களை அதி­க­மாக தாக்கும் இந்த நோயினால் இது­வரை 73 பேர் பலி­யா­ன­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லையில், மல்­காங்­கிரி மாவட்டம், சிகாப்­பள்ளி கிராம பஞ்­சா­யத்­துக்கு உட்­பட்ட போல்­கன்டா பள்­ளியில் நான்காம் வகுப்பில் படித்­து­வரும் உமேஷ் மாதி என்ற பத்­து­வ­யது சிறுவன் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழு­தி­யுள்ளான்.

அந்த கடி­தத்தில் அவன் கூறி­யுள்­ள­தா­வது:-

ஐயா, ஜப்பான் ஜுரத்­துக்கு என்­னு­டைய நண்­பர்கள் பலர் பலி­யாகி விட்­டனர். உலகை சுற்­றி­வரும் நீங்கள் எங்கள் ஊருக்­கு­வந்து, இங்கு குழந்­தைகள் எப்­படி சாகி­றார்கள்? என்று பார்த்து எங்கள் உயிரை காப்­பாற்ற வேண்டும்.

உலகின் பல­நா­டு­க­ளுக்கு சுற்­றுப்­ப­யணம் செய்யும் நீங்கள் எங்கள் கிரா­மத்தில் வசிக்கும் மக்­களின் பரி­தாப நிலையை பார்ப்­ப­தற்­காக இங்கு வரக்­கூ­டாதா? என்று தனது கடி­தத்தில் அவன் எழு­தி­யுள்ளான்.

வீரவன்ச, முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 17 பேருக்கு அழைப்பாணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய உள்ளிட்ட 17 பேருக்கு பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் உறுப்பினர்கள், தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் காணப்படும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று கோடி ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் பாதுகாப்பு வழங்கக்கூடிய எவ்வித தகுதியும் அற்றவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியமை குறித்து முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியதனால் அரசாங்கத்திற்கு நான்கு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்ச, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய உள்ளிட்ட 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஆங்கில மொழியை கற்று தரும் விதவிதமான ஆப்ஸ்கள்

நாம் அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் பேசுவது முதல் சமூக வலைதளங்களில் ஈடுபடுவது, இணையதளத்தை உபயோகிப்பது என அனைத்திற்கும் அடிப்படையான ஆங்கில அறிவை பெற்றிருத்தல் வேண்டும். ஆங்கிலம் கற்க ஏராளமான ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் உள்ளன. ஆயினும் பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வகுப்புகளுக்கு சென்று ஆங்கிலம் பயில்வது என்பது சற்று சிரமமான விஷயம். அதற்கு மாற்றாக நாம் கையில் எந்நேரமும் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனை ஆங்கிலம் பயில பயன்படுத்தி கொள்ளலாம்.

இதற்கென பிரத்யேகமான ஆங்கிலம் கற்று தரும் ஆப்ஸ் வசதி உள்ளன. இந்த முறையில் ஆங்கிலம் கற்பது என்பதில் தமிழ் வழியே சுலபமான முறையில் நடந்து வருகிறது.

நாம் நமது விருப்பமான நேரத்தில் இந்த ஆங்கில மொழி கற்கும் ஆப்ஸ்களை இயக்கி ஒவ்வொரு படி நிலையில் ஆங்கில மொழியை கற்று பேசவும், எழுதவும் முடியும். ஆப்ஸ் வழியே எப்படி என தயங்க வேண்டாம். நாம் தொடு திரை வழியே ஒவ்வொரு நகர்வின் மூலம் பெரிய வாக்கிய முதல் சிறிய வார்த்தை பயிலுதல் மற்றும் அதன் அர்த்தங்க்ள அறிதல் என பல முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஆங்கில மொழியை கற்க உதவும் ஆப்ஸ்கள்

ஆங்கில மொழியை தமிழ் வழியேயும், ஆங்கிலத்தின் மூலமும் கற்க ஏராளமான ஆப்ஸ்கள் உள்ளன. நாம் அதிகம் பயன்படுத்தும் ஆன்ட்ராய்ட் மொபைல்களில் உள்ள ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஸ்போக்கன் இங்கிலீஷ் 360 தமிழ், தமிழ் இங்கிலீஷ் டிக்‌ஷனரி, ஹலோ இங்கிலீஷ், ஹெள டூ ஸ்டீக் ரியல் இங்கிலீஷ், லேர்ன் இங்கிலீஷ் வித் இங்கிலீஷ் லீப் என்பது மாதிரியான பல ஆப்ஸ்களை பிளே ஸ்டோர் மூலமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். சில ஆப்ஸ்களை பற்றி அறிவோம்.

ஸ்போக்கன் இங்கிலீஷ் 360 தமிழ் :

ஆங்கிலத்தை இரண்டு நிலைகளில் இந்த ஆப் கற்று தருகிறது. ஆரம்ப நிலை மற்றும் மேம்பட்ட நிலை என்ற இரு நிலைகளில் இலக்கணத்துடன் தமிழ் மொழி வாயிலாகவே ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பெரிய பெரிய வாக்கியங்கள் பல நாம் பல சூழல்களில் பயன்படுத்த ஏதுவாய் உள்ளன. உதாரணமாக ஷாப்பிங், பயணம், அலுவலகம் என்றவாறு தனிப்பட்டவாறு பயன்படுத்த தகுந்த வாக்கியங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கில மொழியறிவு என்பது படித்து அறிவது மட்டுமல்ல சிறந்த உச்சரிப்பும் அவசியம். அதற்கு இது உதவிகரமாக உள்ளது. ஒவ்வொரு வார்த்தையும், வாக்கியமும் சிறந்த உச்சரிப்புடன் பேசி காட்டும். அதன் மூலம் நாம் ஆங்கிலம் தவறின்றி பேச முடியும்.

இந்திய பிராந்திய மொழிகளின் மூலம் ஆங்கிலம் தரும் ஹலோ இங்கிலீஷ் :

தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற பிராந்திய மொழிகள் மற்றும் சில உலக மொழிகள் அனைத்தின் வாயிலாகவும் ஆங்கிலம் பயிலும் வாய்ப்பை ஹலோ இங்கிலீஷ் தருகிறது. நாம் எந்த மொழியிலிருந்து ஆங்கிலத்தை கற்க விரும்புகிறோம் என்பதை தேர்வு செய்து கற்க வேண்டும். நமது பெயரை பதிவு செய்து கற்கும்போது நாம் எவ்வளவு தூரம் கற்று கொள்கிறோம் என்பதையும், நமது மொழியறிவு வளர்ச்சியை கணக்கிட்டு கூறும் வசதியும் உள்ளது.

வித்தியாசமான கிராபிக்ஸ் வடிவமைப்பில் ஆங்கில மொழியை படிப்பது, கேட்பது, கவனிப்பது, பேசுவது என்றவாறு தமிழ் மொழி வழியே நாம் சுலபமாய் ஆங்கிலம் பயிலலாம்.

நவீன ஆன்-லைன் அகராதி :

இது தமிழ் – இங்கிலீஷ் டிக்‌ஷனரி என்ற ஆப்ஸ்-யை ஆன்-லைன் மூலம் தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். இணையதள வசதியின்றியும் அவ்வப்போது ஆங்கில புலமையை பெற்றுக் கொள்ளலாம்.

எந்த ஒரு ஆங்கில வார்த்தை மற்றும் வாக்கியத்திற்கு அர்த்தம் அறிய வேண்டியிருந்தாலும் உடனே தமிழில் வழங்கிவிடும். நாம் தமிழில் டைப் செய்து அதற்கு இணையான ஆங்கில சொற்களை இந்த ஆப்பில் பெறலாம். மேலும், விளக்கமான வீடியோ மூலமும் ஆங்கிலத்தை கற்றறியும் வசதி இந்த ஆப்பில் உள்ளது.

ஆங்கிலத்தை கற்க வகுப்புகளுக்கு செல்லாமல் நமது வசதிக்கேற்ற நேரத்தில் துல்லியமான விளக்கத்துடன் பயில ஆங்கில மொழியறிவு ‘ஆப்’கள் உதவி புரிகின்றன.

ஹிலாரிக்காக யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஷேட வழிபாடு…!

அமெரிக்க ஐனாதிபதித் தேர்தல் இம் மாதம் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகின்றார்.

அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக வேண்டுதல் செய்து ஹிலாரிக்கான தமிழ் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று புயாழ். நல்லூர்க் கந்தசுவாமி மற்றும் யாழ்.மரியன்னை தேவாலயம் ஆகியவற்றில் விசேட பூஜை வழிபாடுகளிலும், பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் முன்பாக 1008 தேங்காய்கள் உடைத்தும் கற்பூரம் ஏந்தியும் சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து யாழ். மரியன்னை தேவாலயத்தில்108 மெழுகுவர்த்தி ஏந்தியும் சிறப்புக் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட பூஜை வழிபாடுகளில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த வழிபாடுகளைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,

இலங்கையின் அரசியல் தீர்வுக்காக, இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வினை எட்டும் நோக்குடன் இறுக்கமாக இலங்கை மீதான தீர்மானத்தினைக் கொண்டுவருவதற்குக் கடந்த காலங்களில் அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டன் மிகவும் பாடுபட்டார்.

இலங்கையில் நடைபெற்று முடிந்த போர்க்குற்றம், இனப்படுகொலை ஆகியவற்றிற்குச் சர்வதேச நீதி கிடைக்கப்பெற வேண்டும். இதற்கு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை சாதகமாக அமைந்திருக்க வேண்டும்.

அந்த வகையில் இலங்கையின் சிறுபான்மை தமிழ் மக்களுக்கான உரிமைகள், அபிலாசைகள் இவர்கள் மூலம் கிடைக்கப்பெறவேண்டும் என்ற நோக்கில் நாங்கள் இந்தப் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

முருகனை வழிபட்டதால் தோஷம், நோய் நீங்கி பலன் பெற்றவர்கள்

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பகழிக்கூத்தர், செந்தூர் முருகனை நினைத்து ‘திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்’ பாடினார். இதையடுத்து அவரது நோய் தீர்ந்தது.

வியாழ பகவான், இங்குள்ள முருகரை வழிபட்டு பேறு பெற்றார். இத்தல முருகப்பெருமானை வழிபட்டால் குரு தோஷம் அகலும்.

5 வயதாகியும் வாய்பேச முடியாமல் இருந்த குமரகுருபரர், திருச்செந்தூர் தலத்தில் 48 நாட்கள் தங்கியிருந்து முருகரை வழிபட்டார். இதையடுத்து அவருக்கு பேச்சுத்திறன் வந்தது.

இலை விபூதி பிரசாதம் :

செந்தில்நாதன் சன்னிதியில் வழிபடும் பக்தர் களுக்கு, ‘பன்னீர்செல்வம்’ என்னும் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த இலையில் உள்ள 12 நரம்புகளும், முருகப்பெருமானின் பன்னிரு கரங்களைக் குறிப்பதாக கூறப்படுகிறது. இந்த திருநீறு பிரசாதத்தை உடலில் பூசிக்கொண்டால், பல்வேறு நோய்கள் குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

2 கோடிப் பேர் பார்த்து ரசித்த வீடியோ மிஸ்பண்ணாமல் பாருங்கள்..!

வளர்ந்து வரும் கோலிவுட் காமெடி நடிகர் யோகி பாபு பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

‘பன்னி மூஞ்சி வாயன்’ என்ற பெயரால் புகழ் பெற்றவர் யோகி பாபு. தனித்துவமான உடல் மொழி, பேச்சு மொழியால் கோலிவுட் சினிமா காமெடியன் லிஸ்ட்டில் தடம் பதிக்க ஆரம்பித்தார்.

இவரை திரையில் மட்டுமே பார்க்கும் பலருக்கும் இவர் வெறும் காமெடியன் என்று தான் தெரியும். ஆனால், இவரை பற்றிய பல உண்மைகள், உங்கள ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

இவரது பெயர் மாற்றத்தில் இருந்து தொழில் மாற்றம் வரை மறைந்திருக்கும் பின்னணி உண்மைகள்…

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி லொள்ளு சபா தான் யோகி பாபுவுக்கு அறிமுகம் கொடுத்தது.

இயக்குனர் ராம் பாலா தான் இவரை கண்டெடுத்தார்.

யோகி பாபுவின் தனித்துவமான தோற்றம் கண்டு தான் ராம் பாலா இவரை தேர்வு செய்தார். இவரை நடிகராக / ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்க தான் அழைத்தார் ராம் பாலா.

யோகி பாபு ராம் பாலாவிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்ற துவங்கினார். ஏறத்தாழ இரண்டு வருடங்கள் இவர் ஸ்க்ரிப்ட் எழுத உதவியாக இருந்தார்.

அமீரின் ‘யோகி’ படம் தான் வெள்ளித்திரையில் யோகி பாபுவுக்கு அறிமுகம். இந்த படத்தின் பெயர் தான் இவர் பெயரின் முன்னாடி விசிட்டிங் கார்ட் போல ஒட்டிக் கொண்டது.

சமீப காலமாக யோகி பாபு மாநில அளவில் கால்பந்தாட்ட வீரராக விளையாடியவர் என்ற செய்தியும் பரவலாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் காமெடியனாக மட்டும் ஜொலித்த யோகி பாபு.

ஆண்டவன் கட்டளையில் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் எனவும் நிரூபித்தார்.

நண்பர்களாய் இருந்து பிரிந்த பிரபலங்கள்

குழந்தைக்கு தினமும் சொல்லவேண்டிய 8 மந்திரங்கள்!

குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து; `ஷொட்டு’ கொடுத்து வளர்க்க வேண்டும். பாராட்டி, ஊக்குவித்து வளர்க்கப்படும் குழந்தை தன்னம்பிக்கையோடு வளர்கிறது; தனித்துவம் பெறுகிறது. எதிர்காலத்தில் சாதனை படைக்கிறது. மாறாக, எப்போதும் குறை சொல்லி, தலையில் கொட்டி வளர்ப்பது, குழந்தைகளைக் குறுகவைத்துவிடுகிறது.

“அந்த பையனை பாரு… எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க். நீயும் இருக்கியே!”, “எப்பப் பாரு விளையாட்டு… நீயெல்லாம் எங்கே முன்னுக்கு வரப்போறே?” இப்படி எப்போதும் அடுத்த குழந்தைகளோடு ஒப்பிட்டு, மட்டம் தட்டி, குறைகூறி, குற்றம் சொல்லிச் சொல்லி குழந்தைகளின் தனித்திறமையை மங்கிப்போகச் செய்துவிடுகிறார்கள் பலர். குழந்தைகளின் இயல்பான ஈடுபாட்டில் இருந்து வேறெங்கோ திசைதிருப்பிவிடுகிறார்கள். அதனாலேயே குழந்தைகள் பிடிவாதக்காரர்களாக, தனித்திறமையோ, தன்னம்பிக்கையோ இல்லாதவர்களாக வளர்கிறார்கள். நம்மைப்போலத்தான் குழந்தைகளும். நம் எல்லோருக்குமே ஏதோ ஓர் அங்கீகாரம் தேவையாக இருக்கிறது. ஒரு சின்ன பாராட்டு, மலையளவு தெம்பைத் தந்துவிடும்; அதுவேதான் குழந்தைகளுக்கும்.
குழந்தைகளிடம் நாம் பேசவேண்டியவை, பேசக் கூடாதவை, அவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் கவனமாக இருத்தல் எனச் சில விஷயங்கள் இருக்கின்றன. அதை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும்… குழந்தைகள் உங்களை மட்டுமல்ல, தங்களையும் உணர்ந்துகொள்வார்கள்.

குழந்தைகளுக்கு அன்றாடம் சொல்லவேண்டிய எட்டு விஷயங்கள் இங்கே…

1. இப்படித்தான் நடந்துக்கணும் செல்லம்!

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை பெரியவர்களுக்கே இருப்பதில்லை. குழந்தைகளுக்கு இருந்தால் அது அபூர்வம், பாராட்டப்படவேண்டிய விஷயம் அல்லவா! அம்மா தன் எட்டு வயது மகளோடு நகரப் பேருந்தில் செல்கிறார். இருவருக்கும் உட்கார இருக்கை கிடைத்துவிடுகிறது. அடுத்த நிறுத்தத்தில், ஒரு தந்தை தன் நான்கு வயது மகனோடு பேருந்தில் ஏறுகிறார். கூட்ட நெரிசல். நிற்பதற்கே தள்ளாடுகிறான் அந்தச் சிறுவன். அப்போது, அந்தச் சிறுமி, “இங்கே வந்து உட்காருப்பா” என்று நகர்ந்து, தன் இருக்கையில் கொஞ்சம் இடம் கொடுக்கிறாள். பேருந்தில் இருந்து இறங்கியதும் அந்தத் தாய், மகளின் தலையை வருடி, “இப்படித்தான் நடந்துக்கணும் செல்லம்!” என்கிறார். குழந்தைகளின் நடத்தையில் நல்ல விஷயங்கள் தென்படும்போது சொல்கிற இந்த வார்த்தைகள் அவர்களை உற்சாகம் கொள்ளவைப்பவை; நன்னடத்தைப் பக்கம் அவர்களைத் திசை திருப்புபவை.

2. ரொம்ப சந்தோஷமா இருக்குடா பட்டு!

குழந்தை மாதாந்திரத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியதாக இருக்கட்டும்; பள்ளி ஃபுட்பால் போட்டியில் கலந்துகொள்ள பெயரைக் கொடுத்துவிட்டு வந்ததாக இருக்கட்டும்; அவ்வளவு ஏன்… பிரேயரில் அன்றையச் செய்திகளை வாசித்ததாகவே இருக்கட்டும்… “ரொம்ப சந்தோஷமா இருக்குடா பட்டு!” என மனமாரச் சொல்லுங்களேன். இது வெறும் வாசகம் அல்ல; அவர்களுக்குத் தங்கள் மேலான மதிப்பைக் கூட்டும் மாமந்திரம். தொடர்ந்து, இதுபோலப் பல செயல்களில் ஈடுபட வேண்டும் என்கிற உத்வேகம் அவர்களுக்கு எழும்.

3. உன்னை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுறேன்!

“அப்பா, டிராயிங் போட்டியில எனக்கு இரண்டாவது பரிசு” என்று வந்து நிற்கிறது குழந்தை. பள்ளி, டியூஷன், ஹோம்வொர்க்… என அன்றாட வேலை பளுக்களைத் தாண்டி குழந்தையின் தனித் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் அது. அப்போது மறக்காமல், “உன்னை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுறேன் கண்ணா!” என்று நல்ல வார்த்தைகளைச் சொல்லிப் பாராட்ட வேண்டும். ஒரு நல்ல செயலைச் செய்து முடிக்கும்போது அவர்களுக்கு இது தேவையாக இருக்கிறது.

4. உன்னால மட்டும்தான்டா இது முடியும்!

எல்லா வேலைகளையும் எல்லோராலும் சிறப்பாகச் செய்ய முடியாது. ஆளுமைப் பண்போ, விளையாட்டில் சூரத்தனமோ, ஞாபகத்திறனில் அபாரத் தன்மையோ… ஏதோ ஒரு ஸ்பெஷல் அம்சம் குழந்தையிடம் இருக்கலாம். அப்படி ஒரு காரியத்தை அவர்கள் செய்து முடிக்கும்போது, “உன்னால மட்டும்தான்டா இது முடியும்” எனச் சொல்லிப் பாராட்டுவது, தங்கள் தனித்தன்மையே பலம் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள உதவும்.

5. நான் உன்னை முழுமனசோட நம்புறேன்!

நம்பிக்கை ஏற்படுத்தும் தாக்கம் அபாரமானது. குழந்தையை மனதார நம்புங்கள். அதை அவர்களிடம் தெரிவிக்கவும் செய்யுங்கள். நம்மைப் பெற்றோர் நம்புகிறார்கள் என்கிற எண்ணத்திலேயே தவறு செய்யத் துணிய மாட்டார்கள். நம்பிக்கை என்ற அடித்தளத்தை இடுவது குழந்தைகளை நேர்மையான மனிதனாக வளர்க்கும்.

6. இதை நீ செய்வேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு!

தயக்கம் பல நேரங்களில் பெரிய தடை; ஒரு நல்ல தொடக்கத்தையே முடக்கிப்போட்டுவிடும் ஆற்றல் அதற்கு உண்டு. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது… அது மியூஸிக் கிளாஸோ, கராத்தே பயிற்சியோ, நீச்சலோ… குழந்தை தயங்கினால், அதை உடைக்க வேண்டும். “இதை நீ செய்வேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு!” போன்ற வாசகம், அவர்களுக்குத் தாங்கள் எவ்வளவு மதிப்புக்குரியவர்கள், தன் மேல் பெற்றோர் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.

7. இதை செஞ்சு முடிச்சிடுவேன்னு எனக்குத் தெரியும்!

`குருவி தலையில் பனங்காயை வைப்பதுபோல…’ என ஒரு பழைய பழமொழி உண்டு. இன்றைய பிள்ளைகளின் பாடச்சுமை என்பது அப்படித்தான். இந்தச் சூழலில் குழந்தைகள் செய்கிற ஒவ்வொரு செயலையும் பாராட்டி, அவர்களை ஊக்குவிப்பது மிக அவசியம். இரவு 9 மணி வரை படித்துவிட்டு, குழந்தை “அம்மா… நாளை டெஸ்ட்டுக்கு ரெடியாயிட்டேம்மா!” என்று சொல்கிறது. அப்போது, “வெரிகுட்! நீ படிச்சு முடிச்சிடுவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்!” என்று அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்க முடியாதபடிக்கு சொல்லி உற்சாகப்படுத்தவேண்டியது மிக அவசியம்.

8. இதை மறக்கவே மாட்டேன். ரொம்ப நன்றிடா செல்லம்!

பிறந்த நாள், திருமண நாள் போல குழந்தைகளுக்கும் சில தினங்கள் மறக்க முடியாதவையாக இருக்கும். ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த தினம், செஸ் போட்டியில் சாதனை படைத்த நாள், பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்ற ரிசல்ட் வந்த தினம்… எதுவாகவும் இருக்கட்டுமே! அதைக் குறித்து வைத்திருந்து, குழந்தைகளிடம் அதைப் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது. “இதை மறக்கவே மாட்டேன். ரொம்ப நன்றிடா செல்லம்!” என்கிற வாசகம், அந்த நாளை அவர்களுக்குத் தனிச்சிறப்புள்ளதாக மாற்றிவிடும்.

விவாகரத்து வாங்கிய பிரபலங்கள்

தமிழ் சினிமா நடிகர் நடிகை இவர்கள் படித்து முடிந்த படிப்புக்கள்!

இப்படியொரு லவ் சீனை உங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!

ஜெயலலிதா@42… கருணாநிதி@23… வீடான மருத்துவமனை, மருத்துவமனையான வீடு!

அறிவாலயம் இருக்குமிடம் நோக்கி அன்றுதான் தொண்டர்கள் (டிசம்பர்- 27, 2014) அதிகமாகக் குவிந்தனர். “கருணாநிதி சீரியஸ்” என எங்கிருந்தோ புறப்பட்ட வதந்தி கழக உடன்பிறப்புகளை மொத்தமாக அறிவாலயம் நோக்கிச் செல்ல வைத்தது.

இடுப்பு வலி காரணமாக சென்னை அப்போலோவில் அப்போது அனுமதிக்கப்பட்டிருந்தார் கருணாநிதி. ஆனால், வெளியிலோ, இடுப்பு வலியை இதயவலி என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

” உளவுப் பிரிவு போலீசார் தான் இப்படி வேண்டுமென்றே புரளியைப் பரப்பி வருகின்றனர். இது விஷமத்தனமானது, தேவையற்றது. கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் உள்ளார். பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் ” என்று அன்றைய தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி, போலீசார் மீது குற்றம்சாட்டினார்.

தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனும், “இன்னும் இரண்டு நாட்களுக்கு கருணாநிதி ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். தற்போது அவர் நலமுடன் உள்ளார்” என்று மீடியாக்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், “சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அவர் மருத்துவமனையில் உள்ள புகைப்படத்தையும் வெளியிட வேண்டும்” என்று கடந்த மாதம் முதல் வாரத்தில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், “முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பவும், புகைப்படத்தை வெளியிடுமாறு வலியுறுத்தவும் கருணாநிதிக்கு எந்த உரிமையும் இல்லை” என்று இதற்கு பதிலடி கொடுத்தார்.

அக்டோபரில் கருணாநிதி உடல்நிலை !

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை மூலம் கருணாநிதி, விசாரித்துக் கொண்டிருந்த வேளையில்தான், “கருணாநிதிக்கும் உடம்பு சரியில்லையாமே?” என்ற கேள்வியுடன் அங்கொன்றும், இங்கொன்றுமாக அக்டோபர் 10-ம் தேதிவாக்கில் ஆரம்பித்தது சலசலப்பு.

‘கருணாநிதி உடல்நிலை’ குறித்த விவகாரத்துக்கு அக்டோபர் -24- ம் தேதி, அதாவது 13- நாள் கழித்து முற்றுப்புள்ளி வைத்தது தி.மு.க. தலைமை.

“திடீர் ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை யாரும் சந்தித்து தொந்தரவு செய்ய வேண்டாம்” என தி.மு.க. தலைமை அறிக்கை வெளியிட்டது.

பல சந்தர்ப்பங்களில் உடல்நலக் குறைவால் கருணாநிதி சிகிச்சை பெற்றவர்தான். ஆனால் அது எப்போதும் ஒரு வாரம் கடந்ததில்லை. முதல்முறையாக கருணாநிதி ஒரு மாத காலம் தொண்டர்களைச் சந்திக்காமலும், அறிவாலயத்துக்கு வராமலும் ஓய்வில் இருப்பது இதுதான் முதல்முறை.

கோபாலபுரம் வீட்டிற்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோர் கருணாநிதியின் மகனும், கட்சியின் பொருளாளருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்தனர்.

தொடர்ந்து, பல கட்சிகளின் தலைவர்கள் (அ.தி.மு.க. தவிர்த்து) ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.

கட்சி அலுவலகமான அறிவாலயம் செல்லவில்லை. இடைத் தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்த நேர் காணல் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மூன்று தொகுதி வேட்பாளர்களும், கருணாநிதியைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு சந்திப்புக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

காவிரி பிரச்னை தொடர்பாக, அறிவாலயத்தில் நடந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் என எதிலும், கருணாநிதி பங்கேற்கவில்லை. ‘உள்கட்சி பாலிடிக்ஸ் ஓடுகிறது, தலைவர் கோபமாக இருக்கிறார்’ என்று இதற்கான பதிலையும் சிலர் தயாரித்து ‘வதந்தி’ யாக ஓடவிட்டனர்.

“கருணாநிதிக்கு, தொடர்ந்து சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால், அதற்காக அவர் சிகிச்சை பெற்றார். அப்போது உட்கொண்ட மருந்தினால், ஏற்பட்ட, ‘அலர்ஜி’ காரணமாக, கை, கால்களில் கொப்பளங்கள் உருவாகியுள்ளன. குடும்ப டாக்டர் கோபால் தலைமையில், அவரது உடல் நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னையின் பிரபல மருத்துவமனை டாக்டர்கள், கோபாலபுரம் வீட்டிற்கே வரவழைக்கப்பட்டு, கொப்பளங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று அறிவாலயம் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகின.

தி.மு.க தலைவர் கருணாநிதி இப்போதுள்ள சூழ்நிலையில் கோபாலபுரம் வீடு, ஏறக்குறைய மருத்துவமனையாகவே ஆகி விட்டிருக்கிறது… அப்போலோ மருத்துவமனையோ தினந்தோறும் சூழும் அ.தி.மு.க. தொண்டர்களால் போயஸ் கார்டனாகி விட்டிருக்கிறது.

இன்னும் 20 ஆண்டுகள் மக்கள் சேவைக்காக வாழ்வேன்!

இந்தியாவின் இமயமலைப் பகுதியை ஒட்டியுள்ளது திபெத் நாடு. இந்த திபெத் நாட்டில் 14-வது தலாய்லாமாவாக தென்சின் கியாட்சோ உள்ளார். அவருக்கு தற்போது வயது 81.

இந்நிலையில், மக்களுக்கு சேவை செய்தற்காக மேற்கொண்டு 20 ஆண்டுகள் உயிர்வாழ விரும்புவதாக தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தலாய்லாமா கூறுகையில், “ஏற்கனவே நான் சொன்னது போல், நான் நூறு வருடத்திற்கு மேல் வாழ்வதற்கு பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கொண்டு தனிப்பட்ட வகையில் நானும் 20 ஆண்டுகள் வாழ பிராத்தனை செய்கிறேன். கூட்டு பிராத்தனை மதத் தலைவர்களிடையே நல்ல உறவை ஏற்படுத்துகிறது” என்றார்.

முன்னதாக புத்த மத தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டு பிராத்தனை கூட்டம் தர்மசாலா நகரில் நடைபெற்றது. இதில் ஏராளமான மத குருமார்கள் கலந்து கொண்டனர்.

மறைக்கப்பட்ட மஹிந்தவின் மறுபக்கம்! அம்பலமாகும் உண்மைகள்

இழந்த அதிகாரங்களை மீண்டும் பெற்றுக்கொள்வதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிரமாக செயற்பட்டு வருகிறார்.

சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக செயற்பட்ட மஹிந்த, தற்போது அதனை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டு, சுதந்திர கட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் மற்றுமொரு தோல்வியை சந்திக்க நேரிடும் எனும் பயம் மஹிந்தவை ஆட்கொண்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் மறைமுகமான ரீதியில் தனது காய்நகர்த்தல்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமகால அரசாங்கத்திற்கு எதிரான மாற்று அரசியல் சக்தி என்ற பெயரில் நேற்று புதிய அரசியல் கட்சியொன்று உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது.

புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டமையின் ஊடாக செயற்படுத்துவதற்கு எதிர்பாரக்கும் அரசியல் திட்டம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற பெயரில் செயற்படும் இந்த கட்சியின் தலைவராக முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியின் பெயருக்கு பதிலாக புதிய கட்சியின் பெயரை பயன்படுத்துவதாக நேற்று தேர்தல் ஆணையாளரிடம், பீரிஸ் அறிவித்திருந்தார்.

இந்த கட்சியின் தலைவர் யார் என்பதனை வெளிப்படுத்தவில்லை என தகவல் வட்டாரங்கள் கூறிய போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே தலைவர் என தெரியவந்துள்ளது.

அந்த கட்சியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நாட்டு மக்களின் மற்றும் புதிய கட்சியின் கோரிக்கைக்கமைய தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளுமாறு மஹிந்தவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக நாட்டு மக்களுக்கு காட்டுவதே இங்குள்ள ஒரு நோக்கமாகும்.

பின்னர் பாரிய மக்கள் கோரிக்கைக்கமைய தான் புதிய கட்சி தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதாக மஹிந்தவினால் அறிவிப்பு விடுப்பது இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கையாகும்.

பின்னர் இனவாத குழுக்களாக அடையாளப்படுத்தும் நபர்கள் முன்னாள் ஜனாதிபதி மற்றும் புதிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக கூறி புதிய கட்சியை வலுப்படுவதற்கு இணைவதாக காட்டுவது இந்த நடவடிக்கையின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும்.

குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கமைய கூட்டு எதிர்க்கட்சியின் திட்டத்தின் இறுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சியின் தலைவராக இணைவதே திட்டம் என தெரியவந்துள்ளது.

தமிழ் முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு என்ன தெரியுமா? – செல்வரட்னம் சிறிதரன்

வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசமாகும். இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். ஆயினும் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை பேரினவாத சிந்தனையில் தோய்ந்துள்ள சிங்களவர்கள் விரும்பவில்லை. அதனை அவர்கள் முழுமையாக எதிர்க்கின்றார்கள்.

சிறுபான்மையினராகிய தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேச கோட்பாட்டையும் அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.

இந்தக் கோட்பாட்டை ஏற்று வடக்கையும் கிழக்கையும் இணைத்தால், அந்த இணைப்பின் ஊடாக ஒரு தமிழ்ப் பிராந்தியம் உருவாகுமானால், அதுவே நாளை தனித் தமிழ் நாடாக,

தமிழ் ஈழமாக மலர்ந்துவிடும், ஆனால் நாடு இரண்டாகப் பிளந்துவிடும் என்று அவர்கள் அரசியல் ரீதியாக அச்சம் கொண்டிருக்கின்றார்கள்.

இது நியாயமானதோர் அச்ச உணர்வுதானா என்பது சிந்தனைக்கும் விவாதத்திற்கும் உரியது. தமிழ் பேசும் மக்கள் தமது தாயகப் பிரதேசத்தில் தமது நிர்வாகக்

கடமைகளைத் தாங்களே நிறைவேற்றி, சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். தனி நிர்வாக அலகாகப் பிரிந்திருக்க அவர்கள் விரும்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.

பெரும்பான்மை இன அரசியல்வாதிகள், சிறுபான்மை இன மக்களை பெரும்பான்மையினத்தவராகிய சிங்கள மக்களைப் போன்று அனைத்து உரிமைகளையும் இறைமையையும் கொண்டவர்களாக வாழ விடுவதற்கு விருப்பமற்றவர்களாக இருக்கின்றார்கள். அத்தகைய அரசியல் உரிமைகளை அவர்கள் பெற்றிருந்தால்,பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களை அடக்கி ஆளத்தொடங்கிவிடுவார்கள் என்பது அவர்களுடைய அச்சமாகக் காணப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல், சிங்கள மக்களுக்கு இலங்கை மாத்திரமே உலகத்தில் உள்ள ஒரேயொரு நாடாக அவர்கள் கருதுகின்றார்கள். தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில், வடமேற்கே தலை மன்னாரில் இருந்து சுமார் 28 மைல் தொலைவில் அமைந்துள்ள தமிழ்நாட்டுடன் அவர்கள் இணைந்து வாழ வழியிருக்கின்றது.

அத்தகைய நல்ல அமைப்பு இலங்கையின் வடபகுதிக்கும் தமிழ் நாட்டுக்கும் அமைந்திருக்கின்றது. இதனால். கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கியதாக வடக்கு தனிநாடாக மாறுமேயானால், அது தமிழ் நாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கவும், அதன் ஊடாக சிங்கள மக்களுக்கும் நாட்டின் சிங்களப் பிரதேசங்களுக்கும் அரசியல் ரீதியில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதும் அவர்களுடைய சிந்தனையாக உள்ளது.

அதேபோன்று இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற முஸ்லிம்களும், முஸ்லிம் நாடுகளும் உதவ முற்படுவார்கள். இலங்கையில் அவர்கள் தனித்துவம் பெற்றால், அதன் ஊடாக உலக முஸ்லிம் சமூகத்திடமிருந்து தங்களுக்கு அரசியல் ரீதியாக அச்சுறுத்தல்கள் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற எண்ணமும் காணப்படுகின்றது,

இந்த வகையில் தமிழ் மக்களையோ அல்லது முஸ்லிம் மக்களையோ தன்னாட்சி அதிகாரம் கொண்டவர்களாக மாறுவதற்கு இடமளித்தால், சிங்கள மக்கள் தமக்கென தனித்துவமான ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு நாட்டையோ கொண்டிருக்க முடியாது.

தமது இனம் பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்ற சிந்தனைப் போக்கும் சிங்கள மக்களிடம் இருக்கின்றது. இதன் காரணமாகவே சிறுபான்மையினங்களாகிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தங்களுக்குப் பணிந்தவர்களாக, தங்களை மேவிச் செல்ல முடியாதவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணப் போக்கு சிங்கள தேசியவாதிகளிடம் காணப்படுகின்றது.

எனவேதான், வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதில் அவர்கள் பிடிவாதமான போக்கைக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

வடக்கும் கிழக்கும் இணைவதன் ஊடாகவோ அல்லது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கான தனியான நிர்வாக அலகாக அது மாறுவதனால் சிங்கள தேசியவாதிகள் அஞ்சுவதைப் போன்று சிறுபான்மையின மக்கள் சிங்கள மக்களை அடக்கியாளப் போவதில்லை. மாறாக சிங்கள மக்களுடன் சிறுபான்மையினராகிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஐக்கியமாகவும், அமைதியாகவும் வாழக்கூடியதோர் ஆரோக்கியமான சூழல் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

சிங்கள மக்கள் எவ்வாறு தங்களுடைய மொழி கலாசாரம், மதம் என்பன தனித்துவமாகப் பேணப்பட வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அதேபோன்றுதான் தமிழ் மற்றும்

முஸ்லிம் மக்களும் விரும்புகின்றார்கள். சிங்கள மக்களை ஆக்கிரமிக்க வேண்டும் என்றோ அல்லது அவர்களுடைய மொழி மதம் கலாசாரம் என்பவற்றை இல்லாமற் செய்ய வேண்டும் என்றோ அவர்கள் எண்ணம் கொண்டிருக்கவில்லை.

ஆனால் மறுபுறத்தில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதில் சிங்கள தேசியவாதிகள் உறுதியாக இருப்பதைப் போலவே, முஸ்லிம் தரப்பிலும் சில அரசியல் சக்திகள் வடக்கு கிழக்கு இணைந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்ற ஒரு போக்கையும் காண முடிகின்றது.

முஸ்லிம்கள் தமக்கென தனியான நிர்வாக அலகு ஒன்றை எதிர்பார்ப்பது ஒரு புறமிருக்க, தமிழ் மக்களிலும்பார்க்க, சிங்கள மக்களுடன் அவர்கள் இணைந்து வாழலாம் என்பதற்காகவே, அவர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்கக் கூடாது என குரல் எழுப்புகின்றார்கள் என்று கருத வேண்டியிருக்கின்றது.

தமிழ் முஸ்லிம் இனங்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டியதன் அவசியம்

பேரினவாதம் மற்றும் மதவாத சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் வரையிலும் வடக்கையும் கிழக்கையும் தமது பூர்வீகப் பிரதேசங்களாகக் கொண்டுள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியது முக்கியமாகும்.

பௌத்த மதமே இந்த நாட்டில் மேன்மையுடையது. அதற்கே முன்னுரிமையும், முழு உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்ற மனப்பாங்குடன் செயற்பட்டு வருகின்ற பேரின மதவாத சிந்தனை கொண்டவர்கள், ஒரு போதும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

தங்களுடன் இணைந்து வாழாவிட்டாலும்கூட, முஸ்லிம்கள் தமது மத கலாசார அடையாளங்களுடன் தனித்துவமாக வாழட்டும் என்று அவர்கள் வாழ விடுவார்களா என்பது கேள்விக்குரியதாகும்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக மத ரீதியான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள சிங்கள பேரின மதவாதிகளின் செயற்பாடுகள் வழங்கியுள்ள பல கசப்பான அனுபவங்களை முஸ்லிம் மக்கள் இலகுவில் மறந்துவிட முடியாது.

ஆனால் தமிழ் மக்களிடமிருந்து முஸ்லிம் மக்களுக்கு இத்தகைய கசப்பான அனுபவங்கள் எற்படவில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் காலம் காலமாக வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் புட்டும் தேங்காய்ப்பூவும் போல இணைந்து வாழ்ந்த வரலாறு பதிவாகியிருக்கின்றது.

அவர்கள் தங்களுக்குள் அந்நியோன்னியத்தையும், பிரிக்க முடியாத அளவிலான ஐக்கியத்தையும் கொண்டிருந்தார்கள். கொண்டிருக்கின்றார்கள் என்பதை எவரும் புறந்தள்ளிவிட முடியாது.

இந்த நிலையில் சுய அரசியல் இலாபத்திற்காகவே வடக்கையும் கிழக்கையும் இணைக்கக் கூடாது என்று முஸ்லிம்களில் சிலர் குரல் எழுப்பி வருகின்றார்கள். இவ்வாறு குரல் எழுப்புவதற்கு அவர்கள் முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து முற்றாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு முக்கிய ஆதாரமாகக் கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது.

விடுதலைப்புலிகளின் மக்களை வெளியேற்றிய நடவடிக்கைகள்

தமிழ் முஸ்லிம் மக்களிடையே குறிப்பாக வட மாகாணத்தில் நிலவி வந்த இறுக்கமான சமூக உறவு கடந்த 1990 ஆம் ஆண்டு முஸ்லிம் மக்கள் முழுமையாக விடுதலைப்புலிகளினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட துன்பியல் சம்பவத்தினால் மோசமாகக் குலைந்து போகக் காரணமாகியிருப்பதை எவரும் மறுக்க முடியாது.

முஸ்லிம் மக்களுக்கு அத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கக் கூடாது என்பது தமிழ் மக்களில் அநேகமானவர்களின் கருத்தாகும்.

விடுதலைப்புலிகளினால் முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, இவர்கள் செய்வதறியாமல், மனம் கலங்கி துயருற்றிருந்தார்கள். சிலர்

விடுதலைப்புலி முக்கியஸ்தர்களுடன் இது தொடர்பில் விவாதித்திருக்கின்றார்கள். வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்தார்கள்.

ஆயினும் விடுதலைப்புலிகளின் தலைமை முஸ்லிம் மக்களை முற்றாக வெளியேற்ற வேண்டும் என்று எடுத்திருந்த முடிவுக்கு மாறாக எவராலும் எதையும் செய்ய முடியாத நிலைமையே நிலவியது.

இவ்வாறு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஓர் இன அழிப்பு நடவடிக்கை என சுட்டிக்காட்டி, அதனைக் கண்டிப்பது மட்டுமல்லாமல் காலம் கடந்த நிலையிலும் விமர்சனம் செய்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 26 ஆவது ஆண்டு நினைவுகூரலின்போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மிகவும் காத்திரமானவை.

‘வடக்கு மாகாணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையானது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். அது ஒரு பாரதூரமான விடயம். அவ்விதமான கருமம் இடம்பெற்றிருக்கக் கூடாது. அதனை ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறுவதன் மூலம் மாத்திரம் அதற்கான தீர்வு காண முடியாது’ என அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மொத்தத்தில் அந்தச் சம்பவமானது, பரிகாரம் காண முடியாத ஒரு சம்பவமாகவே அமைந்திருக்கின்றது. ஆயினும் முஸ்லிம் மக்களுடன் தமிழ் மக்களுக்கோ, விடுதலைப்புலிகளுக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுள்ள அரசியல் தலைவர்களுக்கோ முஸ்லிம் மக்களுடன் எந்தவிதமான பகைமை உணர்வும்கிடையாது.

அரசியல் ரீதியான பகையுணர்வும் அவர்களிடம் இல்லை என்பது மிகவும் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. பிரதேசங்கள் அழிக்கப்படவில்லை

இருப்பினும் முஸ்லிம் மக்கள் அன்று நிலவிய இராணுவ அரசியல் சூழல் காரணமாகவே வெளியேற்றப்பட்டார்கள். அவ்வாறு அவர்கள் இன அழிப்பு நோக்கத்துடன் வெளியேற்றப்பட்டிருந்தால், கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தையும் வன்னிப் பிரதேசத்தையும், தமது பூரணமான கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலப்பகுதியில் முஸ்லிம் மக்களுடைய பிரதேசங்களை தரை மட்டமாக்கியிருக்கலாம்.

அவர்களுடைய வணக்கத் தலங்களாகிய பள்ளிவாசல்களை இடித்து அழித்திருக்கலாம். அல்லது முஸ்லிம் மக்களுடைய வீடுகள் காணிகள் என்பவற்றைத் தமிழ் மக்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கலாம்.

அவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை. மாறாக முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்த போதிலும், என்றோ ஒரு நாள் அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருவார்கள் என்ற நிலைப்பாட்டில், அவர்களுடைய பிரதேசங்கள் அப்படியே விடப்பட்டிருந்தன.

முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் அடுத்தடுத்த வீடுகளில் அல்லது ஒரே வீதியில் வசித்திருந்த பகுதிகளில் சில வீடுகளில் தமிழ் மக்கள் இடப்பெயர்வு காரணமாகத் தற்காலிகமாகத் தங்கியிருந்தார்கள். ஆனால் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்த போது, அந்த வீடுகளை அவர்கள் உரியவர்களிடம் கையளித்துவிட்டுஒதுங்கிக் கொண்டார்கள்.

யுத்த மோதல்களின்போதும், வான் வழி தாக்குதல்கள் காரணமாகவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களுடைய பிரதேசம் அழிவுக்கு உள்ளாகியதே தவிர, அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய விடுதலைப்புலிகளோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களோ அந்தப் பிரதேசத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எந்தநடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இதன் காரணமாகத்தான் முஸ்லிம் மக்கள் வெள்யேற்றப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், அந்த மக்களுடைய அழிவக்குள்ளாகிய வீடுகள், சிறிய சேதங்களுடன் மிஞ்சியிருந்த வீடுகள் என்பன அப்படியே இருந்தன. அவர்களுடைய பள்ளவாசல்கள், பாடசாலைகள் என்பனவும் எந்தவிதமான திட்டமிடப்பட்ட சேத நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் மிஞ்சியிருந்தன.

இன அழிப்பு நோக்கத்துடன் முஸ்லிம் மக்கள் அன்று வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தால், அவர்களுடைய பிரதேசங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கக் கூடும். அடையாளம் தெரியாத வகையில் மாற்றப்பட்டிருக்கக் கூடும்.

அது மட்டுமல்லாமல் அன்றைய யுத்த மோதல்கள் நிறைந்த அரசியல் சூழலில் முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதன் காரணமாகவே, அந்த மக்கள் பெரும் உயிரிழப்புக்களில் இருந்து தப்ப முடிந்திருக்கின்றது. முஸ்லிம் மக்களில் சிலர் சிங்கள மொழி தெரிந்திருந்த காரணத்தினாலும், சுய இலாபம் கருதியும் சில வேளைகளில் சுய அரசியல் இலாபம் கருதியும் இராணுவத்தினருடன் நெருங்கிச் செயற்பட்டு, அதன் மூலம் தமது ஆயுத போராட்டத்திற்குப் பங்கம் எற்படலாம் என்ற காரணத்திற்காகவே விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக வடக்கில் இருந்து வெளியேற்றியிருந்தார்கள்.

அக்காலப் பகுதியில் இராணுவத்திற்கான உளவு வேலைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்திலும், அவ்வாறு செயற்பட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தும் தமிழர்கள் பலர் விடுதலைப்புலிகளின் தண்டனைக்கு உள்ளாகியிருந்தார்கள்.

அப்போது முஸ்லிம் மக்கள் அவ்வாறு வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால், பல விரும்பத்தகாத வகையில் பல உயிரிழப்புக்கள் எற்பட்டிருக்கவும் கூடும்.

அத்துடன் விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான மோதல்களில் சிக்கி தமிழ் மக்களுக்கு நேர்ந்தது போன்று முஸ்லிம் மக்களுக்கும் உயிரிழப்புக்கள் நேர்ந்திருக்கவும் கூடும்.

இத்தகைய இழப்புக்கள், முஸ்லிம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் ஊடாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதை இன அழிப்பாக நோக்குபவர்கள் கவனத்திற்கொள்வது அவசியமாகும்.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதனால் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களில் பலர் பெரும் இன்னல்களுக்கும் கஸ்டங்களுக்கும் உள்ளாகினார்கள் என்பது உண்மை.

அதேபோன்று அவ்வாறு வெளியேறியதனால், போர்ச்சூழலற்ற பகுதியில் வாழ்ந்த அவர்களில் பலர் கல்வி, வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

அது மட்டுமல்லாமல், முஸ்லிம் பெண்கள் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் இந்த இடப்பெயர்வே ஏற்படுத்தியிருந்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

காலச்சூழலே காரணம்

எனவே, ஒரு காலச் சூழல் காரணமாகவே முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து முற்றாக வெளியேற நேர்ந்தது. அவர்கள் மீது கொண்டிருந்த பகை உணர்வு காரணமாகவோ அல்லது

அவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காகவோ அவர்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்படவில்லை.

அவ்வாறு அவர்கள் மீது பகைமை கொண்டாடுவதற்கோ அல்லது அவர்கள் மீது பழி தீர்த்துக் கொள்வதற்கான தேவையோ அப்போது விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

முஸ்லிம் மக்களைப் போலவே, 1995 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் இருந்து லட்சக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் முற்றாக வன்னிப் பெருநிலப்பகுதிக்கு வெளியேற்றியிருந்தார்கள். முஸ்லிம் மக்களை எவ்வாறு வெளியேற்றினார்களோ அதேபோன்றுதான் தமிழ் மக்களும் யாழ் குடாநாட்டில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டார்கள்.

முஸ்லிம் மக்களை வெளியேற்றியது விடுதலைப்புலிகளின் இன அழிப்பு நடவடிக்கை என்றால், யாழ் குடாநாட்டில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியதையும் ஓர் இன அழிப்பு நடவடிக்கை என்று கொள்ளலாம் அல்லவா? முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதைப் பற்றி விமர்சிப்பவர்கள், தமிழ் மக்களை வெளியேற்றிய விடுதலைப்புலிகளின் நடவடிக்கையை ஏன் விமர்சிக்கவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

எனவே, முஸ்லிம் மக்களையும்சரி, தமிழ் மக்களையும் சரி விடுதலைப்புலிகள் இராணுவச் சூழல் – யுத்தச் சூழல் காரணமாகவே வெளியேற்றினார்கள் என்பது புலனாகின்றது.

இந்தச் சம்பவங்கள் இடம்பெற்று இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகின்றன. இந்த நிலையில் இப்போதைய அரசியல் சூழலில் எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு, அரசியல் ரீதியான முன்யோசனையுடன் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்;தினர் செயற்பட வேண்டியதே முக்கியமாகும்.

மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் எழுந்தமானமாக வடமாகாண சபை மீதோ அல்லது வேறு அரசியல்வாதிகள் மீதோ குற்றம் சுமத்துவது பொருத்தமானதாகத் தெரியவில்லை.

சொந்தக்காணிகளில் சென்று மீள் குடியேறுபவர்களுக்கு அரசியல் ரீதியாகவோ சமூக ரீதயாகவோ அல்லது நிர்வாக ரீதியாகவோ தடைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அல்லது அத்தகைய தடைகளை யாரும் வேண்டுமென்று ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரியவில்லை.

ஆனாலும் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மீள்குடியேற்றத்தில் பல பிரச்சினைகளும் நிர்வாக ரீதியான தடைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

இத்தகைய பிரச்சினைகளையும், தடைகளையும் நீக்குவதற்கு முன்னைய அரசாங்கத்தில் அதிகார பலம் பெற்றிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முறையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.

முஸ்லிம் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு முறையான பொறி முறையொன்றை அரசாங்கம் வகுப்பதற்கு அரசியல் அதிகார பலம் கொண்டுள்ள முஸ்லிம் தலைவர்கள் ஓரணியில் திரண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு அவர்கள் செயற்படுவதற்கு தமிழ் அரசியல் தலைவர்களின் ஆதரவையும் பெற்;றுக் கொள்வதிலும் எந்தவிதத் தடையும் இருக்கமாட்டாது.

ஆனால், சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் மீள்குடியேற்றுவதற்காக அரசாங்கம் உத்தேசித்துள்ள பொறிமுறையானது அரசியல் நோக்கம் கொண்டதொரு செயற்படாகும். முஸ்லிம் மக்களைப் போலவே நீண்ட காலமாக மீள் குடியேற்றப்படாமல் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் இந்தப் பொறிமுறை உள்ளடக்கப்படாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதன் காரணமாகத்தான் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்தப் பொறி முறையை சந்தேகக் கண்கொண்டு நோக்குகின்றார்கள். அதற்கு எதிராகக் குரல் எழுப்பியிருக்கின்றார்கள்.

இடம்பெயர்ந்தவர்கள் என்றால் அவர்கள் யாராகவும் இருக்கலாம். இன, மத அரசியல் பேதங்களைக் கடந்து அவர்களை மனிதர்களாக – இடப்பெயர்வு காரணமாக அவலப்பட்டவர்களாக, அனுதாபத்திற்குரியவர்களாகக் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

அதேநேரம் வடக்கையும் கிழக்கையும் தாயகப் பிரதேசமாகக் கொண்டுள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதும் முக்கியமாகும்.

அதேபோன்று வடக்கும் கிழக்கும் பூகோள ரீதியாக மட்டுமல்ல. சமூக ரீதியாகவும் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அரசியல் ரீதியான வேறுபாடுகளைக் கடந்து, எதிர்கால நன்மைகளைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும், அரசியல் தலைவர்களினதும் பொறுப்பாகும்.

இல்லையேல் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய சம்பந்தன் கூறியிருப்பதைப் போன்று கிழக்கு கைநழுவிப் போக நேரிடலாம்.

திருமண சாட்சியாக கரடியை அழைத்த தம்பதி: ரஷ்யாவில் ருசிகர சம்பவம்

பழுப்பு நிற கரடி முன்னிலையில் தம்பதி ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.

திருமணம் நடைபெற்றது அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு சாட்சியின் முன்னிலையாவது திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. சாட்சியாக இருப்பவருக்கு குறைந்தபட்சம் 18 வயது முடிவடைந்திருக்க வேண்டும்.

இந்த சட்டத்தை சற்று வித்தியாசமாக பயன்படுத்தியுள்ளனர் ரஷ்ய தம்பதி டெனிஸ் மற்றும் நெல்யா. தங்களது திருமண சாட்சிக்கு 18 வயது நிரம்பிய மனிதரை அழைக்காமல் 18 வயது நிறைவடைந்துள்ள பழுப்பு நிற கரடியை அழைத்துள்ளனர். எனவே கரடியின் முன்னிலையில் அவர்களது திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மணப்பெண் நெல்யா, ஸ்டீபன் என்கிற பழுப்பு நிற கரடியை வெகுநாட்களாக தங்களுக்கு தெரியும் என்றும் எனவே ஸ்டீபன் முன்பே தங்களது திருமணம் நடைபெற வேண்டும் என்று மிகுந்த ஆவலாக இருந்ததாக கூறியுள்ளார்.

தற்போது ஸ்டீபன் முன் தங்களது திருமணம் இனிதே நடைபெற்றுள்ளதால் நீண்ட கால கனவு தற்போது நினைவாகி விட்டதாக மகிழ்சி பொங்க தெரிவித்துள்ளார்.

ஸ்டீபன் அதாவது கரடி சற்று பெரிய அளவில் இருந்ததால் சிறிது பயம் இருந்ததாகவும், நிஜ கரடியை கட்டி அணைத்தது மிகப் பெரிய சந்தோசத்தை ஏற்படுத்தியதாகவும் நெல்யா கூறியுள்ளார்.

ஸ்டீபன் கரடிக்கு தற்போது 22- வயதாகிறது. வீட்டில் டிவி பார்ப்பது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது என மனிதன் செய்யும் வேலைகளையும் இந்த ஸ்டீபன் கரடி அருமையாக செய்து முடிக்குமாம். தற்போது திருமணத்தையும் நடத்தி வைத்து மணமக்களையும் ஆசீர்வதித்துள்ளது.

சந்தேக நபரை விடுவித்த பொலிஸ் அதிகாரி விரைவில் கைது!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சந்தேக நபரை விடுவிக்குமாறு உத்தரவிட்ட வழங்கியதாக கூறப்படும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு மே 13-ம் திகதி புங்குடுதீவு பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து குறித்த பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு குறித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஆலோசனை வழங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரை பிரதேச மக்கள் பிடித்து, நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததோடு உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் உதவி சாஜன் ஆகியோரால் சந்தேக நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்ததாக விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதேசவாசிகளால் குறித்த சந்தேக நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்குமாறும், சந்தேக நபரை விடுதலை செய்யுமாறும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அந்த போராட்டத்தினிடையே நீதிமன்றத்திற்கும் கல்வீச்சு நடத்தப்பட்டிருந்தது.

எனினும் பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபர் பின்னர் கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசத்திலிருந்து கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் இரகசிய பொலிஸார் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தியிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வயிற்றில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 1.36 கிலோ போதை மருந்து: பொலிசில் சிக்கிய பரிதாபம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1.36 கிலோ போதை மருந்தை வயிற்றில் மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்த பாகிஸ்தான் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா என்ற பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக சிலர் போதைமருந்துகள் பயன்படுத்துவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக குறித்த இடத்தில் பொலிசார் நடத்திய தீவிர வேட்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞரின் அறையில் 1 கிலோ எடையுள்ள போதைமருந்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது அவர் தன்னுடைய வயிற்றில் போதை மருந்துகளை மறைத்து வைத்துள்ள சம்பவம் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் பொலிசார் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . அப்போது அவருக்கு அளித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் 5 போதை மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் வெளியில் எடுத்துள்ளனர்.

இதனால் மீதம் எவ்வளவு உள்ளது என்பதைப் பார்ப்பதற்காக மருத்துவர்கள் வயிற்றுப்பகுதியை பரிசோதனை செய்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் அவருடைய வயிற்றில் இன்னும் 98 போதைமருந்துகள் உள்ளதாக மருத்துவர்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

அதன் மொத்த எடை 1.36kg என்றும் இதன் மதிப்பு Dh500,000 (இலங்கை மதிப்பு (20,15,86,13 கோடி) வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இது போன்று போதை மருந்துகளை வயிற்றுப்பகுதியில் மறைத்துவைத்து கடத்த முயற்சி செய்வது தவறு என்றும், இது ஒரு சில நேரங்களில் உயிரையும் பறித்துவிடும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு போதை மருந்து கொடுத்து கொடுமை செய்த பெற்றோர்

அமெரிக்காவில் மூன்று குழந்தைகளுக்கு போதை ஊசி செலுத்தி தூங்கவைத்த பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தைச் சேர்ந்தவர் Ashlee Hutt(24) இவரது கணவர் Leroy McIver (25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அதில் பெண்குழந்தைகள் இருவருக்கு 2 வயது மற்றும் 4 வயதும், ஆண் குழந்தைக்கு 6 வயதும் ஆகியுள்ளது.

இந்நிலையில் குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளுக்கு போதை மருந்து ஊசி போட்டு தூங்க வைப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய போது அவர்கள் குழந்தைகளுக்கு போதை ஊசி செலுத்தியுள்ளது உறுதியானது.

இது குறித்து குழந்தைகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு 6 வயது குழந்தை அளித்த பதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்ததுள்ளது.

அக்குழந்தை கூறுகையில், இதை எங்கள் அம்மா, அப்பா இருவரும் தான் உடலில் செலுத்துவார்கள் என்றும், இது போட்டுக் கொண்டல் உடலுக்கு நல்லது என்றும். இது ஒரு வகை சத்து நிறைந்த ஊசி என கூறி செலுத்தியுள்ளனர்.

மேலும் நான்கு வயது குழந்தை கூறுகையில், ஒரு வெள்ளை நிற பவுடரை எடுத்துக் கொள்வார்கள் என்றும் அதை தண்ணீரில் கலக்கி விட்டு பின்னர் அதை தன்னுடைய உடம்பில் செலுத்துவார்கள் என்றும் அதன் பின்னர் தானாக உறங்க சென்று விடுவோம் என கூறியுள்ளார்.

இதில் நடத்திய விசாரணையில் இரு குழந்தைகளுக்கும் போதை மருந்து செலுத்தியது உறுதியாகியுள்ள நிலையில், 2 வயது குழந்தைக்கு மட்டும் போதை ஊசி செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் பொலிசார் அக்குழந்தையின் முடியினை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை என்றும், தீவிர விசாரணைக்கு பின்னரே அது தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.