கோஹ்லி உட்பட நான்கு வீரர்கள் ஓய்வு பெற்று வெளியேற்றம்

2

இந்திய அணியுடன் திரிமான்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி மோதிய இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டி டிராவில் முடிவடைந்தது.

கொழும்பு மைதானத்தில் தொடங்கிய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை பதினொருவர் அணி முதல் இன்னிங்ஸில் 187 ஓட்டங்களில் சுருண்டது.

இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது நாள் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் கோஹ்லி, ரஹானே, ரோகித் சர்மா, தவான் ஆகியோர் மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ஓய்வு பெற்று வெளியேறினர். 9 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியா டிக்ளர் செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 54 ஓட்டங்களும், கோஹ்லி 53 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் பெர்னாண்டோ, கவுஷல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இரண்டு நாள் பயிற்சி போட்டி என்பதால் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.