இலங்கையில் பாரிய சித்திரவதைகள்! ஐ.நா அறிக்கையை ஏற்கும் பிரித்தானியா

e

இலங்கையில் பாரிய சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி பென் எமர்ஸன் சமர்ப்பித்த தவறான அறிக்கையை, பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து பிரித்தானிய ஆசிய நடவடிக்கை அமைச்சர் மார்க் ஷெபில்ட் லண்டனில் இலங்கை உயர் ஆணையாளர் அமாலி விஜேவர்தனவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த அறிக்கையில் இலங்கை பொலிஸாருக்கு எதிராக பாரிய 8 குற்றச்சாட்டுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பில் வைக்கப்பட்டுள்ள 81 விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து கலந்துரையாடலுக்காக எமர்ஸன் விசாரணை மேற்கொள்ளவில்லை.

பென் எமர்ஸன் பிரித்தானிய நாட்டவர் என்பதனால் பிரித்தானிய அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.