தேர்தலை பிற்போட ஒரு போதும் தயார் இல்லை

m

மாகாண சபை தேர்தல் பிற்போட முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட ஆலோசனை பிரிவின் பணிப்பாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் பிற்போட முடியாது. எனினும், அவ்வாறு செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 1999ம் ஆண்டு வடமேல் மாகாண சபை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமை தொடர்பாகவும் அவர் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு வடமேல் மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமையை எதிர்த்து சுயாதீன குழு நீதி மன்றத்தில் வழங்கு தாக்கல் செய்திருந்தது.

இதையடுத்து, இரண்டு வாரங்களில் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய, தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாவும் தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட ஆலோசனை பிரிவின் பணிப்பாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.