-
கன்னி
கன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். நட்பு வட்டம் விரியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
துலாம்
துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுபிடியுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் அளவாக பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள் வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
தனுசு
தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புகூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
மகரம்
மகரம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
-
கும்பம்
கும்பம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். வெற்றி பெறும் நாள்.