புகையில்லாத புகையிலை உற்பத்தி செய்யப்படுவதற்கு இன்று(19) முதல் தடை விதிக்கப்படுவதாக தேசிய புகையிலை மற்றும் போதைப் பொருள் தொடர்பான அதிகார சபை அறிவித்துள்ளது.
இவ்வாறான புகையிலையை உற்பத்தி செய்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், காட்சிப்படுத்தல் என்பனவும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்கம் புகையிலை மற்றும் போதைப் பொருள் தொடர்பில் தேசிய அதிகார சபை கொண்டு வந்த சட்டத்திலுள்ள புகையிலை குறித்த விடயம் கடுமையாக அமுல்படுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் டாக்டர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில், மாவா, பாபுல், ஹான்ஸ், பாம்பரா மற்றும் குட்கா போன்ற புகையிலையுடன் தொடர்பான உற்பத்திகள் உட்பட புகையிலையுடன் காணப்படும் வெற்றிலைக் கூரு, புகையிலை சுருட்டு என்பனவும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார சபைத் தலைவர் மேலும் கூறியுள்ளார்.