லண்டனில் இலங்கை தேயிலை கொண்டாட்ட நிகழ்வு!

tea

பிரித்தானியாவின் அரச அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்கள், அரசசார்பற்ற அமைப்புக்கள் மற்றும் தனியார் வியாபார அமைப்புக்கள் போன்றன லண்டன் நகரில் இலங்கை தேயிலை கொண்டாட்ட நிகழ்வை நடத்தியிருந்தனர்.

லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் மூலமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வை கொழும்பு தேயிலை விற்பனையாளர் சம்மேளனம் மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்தன.

பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன வழங்கிய வரவேற்பு உரையில், ஜேம்ஸ் டெய்லர் மேற்கொண்டிருந்த பெறுமதி வாய்ந்த பங்களிப்பு குறித்து தெரிவித்துருந்தார்.

இலங்கையில், சுமார் 150 வருடங்களுக்கு முன்னதாக தேயிலைச் செய்கையை ஆரம்பித்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், நாட்டின் தேயிலைத்துறையின் அபிவிருத்திக்கு பிரித்தானியா வழங்கியுள்ள பங்களிப்பு தொடர்பிலும் விளக்கமளித்திருந்தார்.

இலங்கையின் உயர்தரம் மற்றும் வெவ்வேறு சுவைத்தெரிவுகள் போன்றவற்றுக்காக உலகளாவிய ரீதியில் பெருமளவு வரவேற்பும் மதிப்பும் காணப்படுகின்றது.