யாழில் இருந்து வவுனியாவுக்கு சென்ற இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதங்களால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை மூந்திசெல்ல விடாமல் தனியார் பேரூந்தின் சாரதி சென்றுள்ளார்.
இதனால் சாவகச்சேரியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 9:15 மணியளவில் சாவகச்சேரி கண்டி வீதியில் சாரதியிடையே முரண்பாடு காரணமாக பேரூந்தை மூந்திச்செல்ல விடாமல் தனியார் பேரூந்தின் சாரதி பேரூந்தினை செலுத்தியுள்ளனர்.
இதனை அவதானித்த பயணிகள் சாவகச்சேரி பொலீசாருக்கு அறிவித்ததை தொடர்ந்து பொலிசார் பேரூந்தை மறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.







