அவிசாவளை – கொழும்புக்கான பழைய வீதியில் முச்சக்கரவண்டியொன்று பாலத்திற்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவிசாவளை – கொழும்புக்கான பழைய வீதியில் அங்கொட சந்தியிலேயே இன்று காலை இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியொன்றே இதன் போது விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அதில் பயணம் செய்தவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லையெனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.