இந்த உடலை விட்டு இறந்தால் “எங்கே செல்கிறோம்…!” என்பதை இப்பொழுதே நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்
மரணமடையும் தருவாயில் பார்க்கலாம். நாம் என்னவெல்லாம் எண்ணுகின்றோம்…!
“எனக்குத் துரோகம் செய்தான்… பாவி…,!” என்று எண்ணத்தில் பிரிந்து சென்றால் “நேராக…பாவி…” என்று சொன்ன உடலுக்குள் உயிராத்மா போகும்.
அதே சமயத்தில் “மகராசன்..,” எனக்கு நல்ல நேரத்தில் உதவி செய்தான் என்று எண்ணினால் யார் உதவி செய்தாரோ அவர் உடலுக்குள் உயிராத்மா போகும்.
எல்லோருக்கும் எல்லா வகையில் நான் உதவி செய்தேன் பல நன்மைகள் செய்தேன் “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று விரக்தியான நிலையில் சோர்வடைந்தால் இதைப் போல சோர்வடைந்த உயிரான்மா நமக்குள் வரும்.
அல்லது அந்த விரக்தியான எண்ணத்துடன் நம் உயிராத்மா பிரிந்தால் சோர்வடைந்த ஒரு மனிதனுக்குள் செல்லும்.
ஒரு வேப்ப மரம் கசப்பான உணர்வுகளை வெளிப்பரப்பித் தன் கசப்பின் தன்மை எப்படி எடுத்துக் கொள்கின்றது. அதைப் போன்று தான்
1.இந்த உடலுக்குள் எந்தக் குணத்தின் தன்மையை
2.நமக்குள் சிருஷ்டித்து முன்னனியில் வைத்திருக்கின்றோமோ
3.அந்த முன்னனியில் வைத்திருக்கும் குணத்திற்குத்தக்க தான்
4.அடுத்த உடலுக்குள் உயிராத்மா போகும்.
ஆனால் இன்னொரு மனிதனின் உடலுக்குள் போனால் ஏற்கனவே இந்த உடலில் எந்தத் தீமைகள் விளைந்ததோ அதைத்தான் அங்கே விளைவிக்க முடியும். தீமைகள் தான் அங்கே கருவாக உருவாக முடியும்.
தீமையை உருவாக்கும் அந்த அசுத்த சக்தியின் நிலைகளை “ஞானிகள் உணர்வு கொண்டு…” அதைத் தடைப்படுத்தினால் தான் இன்னொரு கருவின் தன்மை அது விளையும்.
அது அல்லாதபடி இங்கே விளைந்த தன்மைகள் அது வந்தால் இந்த உணர்வின் நினைவலையாக பல தீய விளைவுகளையே அது ஏற்படுத்தும்.
இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபடுவதற்காக அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் அடிக்கடி சுவாசித்து அதை உடலுக்குள் சேர்த்து நம்மைப் பரிசுத்தப்படுத்தப் பழக வேண்டும்.
ஏனென்றால் எத்தனையோ கோடி மகரிஷிகள் விண் சென்றுள்ளார்கள். அவர்களுடைய உணர்வலைகள் எத்தனையோ உண்டு. அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்காகத்தான் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
1.திரும்பத் திரும்ப இதைப் பதிவு செய்தாலும்
2.ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
3.ஒரேயடியாக எல்லாச் சக்திகளையும் பெற முடியாது.
4.அப்படிக் கொடுக்கவும் முடியாது.
ஒன்றை எடுத்து ஒன்றின் சக்தி வளர்ந்த பின் அதனின் துணை கொண்டு விண்ணின் நிலைகளை ஒவ்வொன்றையும் வளர்க்கும் நிலைக்கு நீங்கள் வர முடியும்.
நான் (ஞானகுரு) பல பெரிய ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் அதை எனக்குள் ஜீரணிக்கும் நிலைகள் குரு பலம் கொண்டு தான் அதைப் பெற்றேன்,
ஆகையினால் எந்தக் கரண்டுடன் (இயக்கச் சக்தி) நீங்கள் தொடர்பு கொள்கின்றீர்களோ அதனின் நிலைகளைத்தான் நீங்கள் பெற முடியும்.
ஒரு TRANSFORMER மாறி இருக்கும் பொழுது வேறு லைனில் இணைப்பைக் கொடுத்தால் அந்தப் பக்கம் மாற்றிக் கொண்டு போய்விடும்.
மெய் ஒளியின் தன்மை கொண்டு அந்த உணர்வின் தன்மையை வளர்க்கும் நிலையாக அதற்குத் தகுந்த மாதிரி கரண்டை உற்பத்தி செய்ய வேண்டும்.
நமக்குள் எந்த வலுவோ அதற்குத் தக்கவாறு நாம் அருளாற்றல்களைப் பெற முடியும்.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
2.அந்தக் கரண்டின் தொடர் வரிசையில் செல்லும் பொழுது தான்
3.அதை நாம் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.
எந்த மகரிஷிகளின் தொடர் வரிசையில் அத்தகைய ஆற்றல்களை நாம் பெறுகின்றோமோ இந்த உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விட்டு அகன்று “நேராக துருவ நட்சத்திரத்திற்கே…” கொண்டு போய் நம்மை நிறுத்தும்.