BIGBOSS நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: இந்து மக்கள் கட்சி போராட்டம்

Protest-720x450

Bigboss நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகரும் குறித்த நிகழ்ச்சி தொகுப்பாளருமான கமல் ஹாசனின் வீட்டிற்கு அருகாமையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆழ்வார்பேட்டையிலுள்ள கமல் ஹாசனின் வீட்டிற்கு அருகாமையில் குறித்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்ச்சி, தமிழர் பாரம்பரியம் மற்றும் தமிழ்ச் சமூகத்தை சீரழிக்கும் வகையில் உள்ளது என்றும் நிகழ்ச்சியை இரத்து செய்யுமாறும் இந்து மக்கள் கட்சியினர் சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக கமல் ஹாசனின் வீடு அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக கமலஹாசனின் வீடு உள்ள பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.